ஆதித்யா எல்1.. இஸ்ரோவில் உருவாக்கப்பட்ட ரூமில்.. பர்ஃப்யூமிற்கு மட்டும் அனுமதி இல்லை.. ஏன் தெரியுமா?
சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது.
சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.

ஆய்வு செய்ய உள்ள விஷயங்கள்: சூரியனின் கொரோனா பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும். சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது.
இதில் இருக்கும் 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 3 கருவிகள் அங்கே இருக்கும் வளிமண்டல பகுதிகளை ஆய்வு செய்யும்.
சூரிய மேல் வளிமண்டலம் (குரோமோஸ்பியர் மற்றும் கரோனா) எப்படி இயங்குகிறது என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும். குரோமோஸ்பிரிக் மற்றும் கரோனா எப்படி வெப்பமாகி உள்ளது என்பது பற்றிய ஆய்வு, அங்கே நடக்கும் அயனியாக்கம் செய்யப்பட்ட பிளாஸ்மாவின் இயற்பியல், கரோனா எரிப்பு என்று அறிவியல் சம்பவம் பற்றிய ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளை ஆதித்யா எல் 1 மேற்கொள்ள உள்ளது.
சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும் நான்கு பேலோடுகளில் ஒன்று Visible Emission Line Coronagraph(VELC) ஆகும். இது கொரோன இமேஜிங் சோதனையை மேற்கொள்ளும். அதேபோல் இந்த விண்கலத்தில் புற ஊதா கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. சூரியனின் மேற்பரப்பைக் கண்காணிப்பதற்கான கருவி ஆகும் இது. இதை SUIT (சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப்) என்று அழைக்கிறார்கள்.
சுத்தம்: இதில் சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும் நான்கு பேலோடுகளில் ஒன்று Visible Emission Line Coronagraph(VELC) ஆகும். இதை பெங்களூரில் மிகவும் சுத்தமான சூழ்நிலையில் உருவாக்கி உள்ளனர். வைரஸ் ஆய்வகம் போல நான்கடுக்கு ஆய்வகம் அமைத்து, அதன் உள்ளே இந்த கருவியை உருவாக்கி உள்ளனர்.
உள்ளே வேலை செய்பவர்கள் கண்டிப்பாக இறுக்கமான கவச உடை அணிய வேண்டும். அதேபோல் அவர்கள் உள்ளே செல்லும் முன் கவச உடை அல்ட்ரா வைலட் கதிர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படும். அதன்பின் அவர்கள் பயன்படுத்தும் கருவிகளும் ஆய்வு செய்யப்படும். கெமிக்கல்கள் உதவியுடன், நவீன வேக்கம் உதவியுடனுடன் உள்ளே இருக்கும் காற்றும் சுத்தப்படுத்தப்படும்.
அதேபோல் 99 சதவிகித தூய்மையான ஆல்ஹகால் மூலம் எல்லா பொருட்களும் சுத்தம் செய்யப்படும். உள்ளே காற்றில் மாசு ஏற்படுவதை தவிர்க்க அனைத்து விதமான ஸ்பிரேக்களும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் உள்ளே செல்பவர்கள் வாசனை திரவியம் கூட அணிந்து செல்ல கூடாது.
ஆய்வுகள்: அதேபோல் சூரியனின் கதிர்களில் பல்வேறு ஆய்வுகளை செய்ய Solar Low Energy X-ray Spectrometer (SoLEXS) மற்றும் High Energy L1 Orbiting X-ray Spectrometer(HEL1OS) போன்ற கருவிகளும் இந்த விண்கலத்தில் அனுப்பப்படுகின்றன. சூரியனில் ஏற்படும் சூரிய காற்றுகளை ஆய்வு செய்ய Aditya Solar wind Particle Experiment(ASPEX) மற்றும் Plasma Analyser Package For Aditya (PAPA) ஆகியவை பயன்படுத்தப்படும்.
இதனால் சூரியனின் பல்வேறு சீக்ரெட்டுகள், முக்கியமாக வெப்பநிலை, வெளிப்புறஅடுக்கு தொடர்பான ரகசியங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை நாட்கள்: 100-127 நாட்கள் பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலன் இது, சூரியனை ஆய்வு செய்ய, ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு உள்ளது. PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications