"பச்சை சுயநலம்!" பாயிண்ட் பாயிண்டாக அதிமுகவை விளாசிய உதயநிதி.. பிரதமர் மோடி குறித்தும் பரபர பேச்சு
சென்னை: திமுக சார்பில் சென்னை போரூரில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், அடுத்து வரும் மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்றும் தெரிவித்தார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி போரூரில் நடந்த பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக சாதனைகளை விளக்கிப் பேசினார். மேலும், அதிமுகவையும் அவர் கடுமையாகப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்
திமுக சார்பில் சென்னை போரூரில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்குப் பேசிய உதயநிதி, தனது அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரையை எழுதியதே மதுரவாயல் தான் என்று குறிப்பிட்டார்

அதிமுக மீது அட்டாக்
தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவை மிகக் கடுமையாகச் சாடினார். அதிமுகவினர் தங்கள் கட்சியையே ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு அடகு வைத்துவிட்டதாக அவர் விமர்சித்தார். அவர் மேலும் கூறுகையில், "அன்று சிலர் பதவியில் இருக்கவும் தங்கள் சுயநலத்திற்காக அன்று ஆட்சியையே ஒட்டுமொத்தமாக எடுத்துச் சென்று அடகு வைத்தவர்கள்.. இன்று அவர்களே ஒட்டுமொத்தமாக தங்கள் கட்சியையும் அடகு வைத்துள்ளனர்.

ஆளுநர் விவகாரம்
தமிழ்நாடு நலனுக்கும் இங்கு வசிக்கும் மக்களின் நலனுக்காகவும் யார் செயல்படுகிறார் என்பதை ஆளுநரே வெளிக்காட்டியுள்ளார். இதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆளுநர் விவகாரத்தில் முதலில் கொதித்தெழுந்தது முதலமைச்சர் ஸ்டாலின் தான். அப்போதே சபையில் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது ஆளுநர் சட்டசபையில் இருந்து கோபித்துக் கொண்டு சென்றார். ஆளுநர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக அதற்கு முன்னரே இருவர் வெளியே சென்றதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்று அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பேராசிரியர் அன்பழகன்
தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் குறித்துப் பேசிய அவர், "கருணாநிதியும் பேராசிரியர் அன்பழகனும் தான் நட்புக்கு உதாரணம்... கருணாநிதி பெரிதும் மதித்த பேராசிரியர் மீது மிகப் பெரிய அளவில் பற்றும் பாசமும் கொண்டவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.. நான் கடந்த 2019இல் இளைஞரணி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், முதலில் நேரில் சென்று வாழ்த்து பெற்றது பேராசிரியரிடம் தான்.

திமுக தலைவர்
அதேபோல கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியரின் பேரனுக்காக நானே சென்று நேரடியாக வாக்கு சேகரித்தேன். மாநிலத்தில் திமுக வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.. திமுக தலைவர் உத்தரவின்படி மாநிலம் முழுக்க பாசறை கூட்டம் நடத்தி முடித்துள்ளோம். இதற்காக முதல்வர் ஸ்டாலின் நம்மைப் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி
மத்தியில் நடைபெற்று வரும் பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை.. கடந்த 9 ஆண்டு ஆட்சியில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, பாசிசத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்கள் தான் நடந்து வருகிறது. இப்போது நடப்பது இறுதி கூட்டம் இல்லை. இதுதான் அடுத்து நடக்கும் மக்களவை தேர்தலுக்கான முதல் கூட்டம்.. மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதி நாம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்!












Click it and Unblock the Notifications