சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டாரா! முதல்வர் டைம் கேட்டதும்.. மோடி சொன்ன ஒரு வார்த்தை! ரூட் மாறுதோ?

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ள நிலையில் நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் என்று டெல்லி செல்கிறார். இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்திக்கிறார்.

இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும், 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்.. பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்.. பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு

 ஆலோசனை

ஆலோசனை

இதில் பல ஆலோசனைகளை செய்ய உள்ளனர். முக்கியமாக நீட் விலக்கு மசோதா டெல்லி உள்ளது. உள்துறை அமைச்சகம் இதை சோதனை செய்துவிட்டது. இப்போது சட்டம் குடியரசுத் தலைவர் முர்மு கையில் உள்ளது. அவர் இதற்கு ஒப்புதல் அளித்தால் அது சட்டமாகும். இதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த டெல்லி பயணத்தில் புதன், வியாழன் டெல்லியில் இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் வெள்ளி வரை திட்டத்தை நீட்டிக்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் பொருட்டு ஆகஸ்ட் 17,18,19 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பு டைம் கேட்டு இருக்கிறதாம். இந்த 3 தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் சந்திக்க நேரம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருக்கிறது.

மோடி ரியாக்சன்

மோடி ரியாக்சன்

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அலுவலகம் நேரம் ஒதுக்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி இந்த விஷயத்தை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார். அப்போது.. ஸ்டாலின் நேரம் கேட்டாரா உடனே அவருக்கு நேரம் கொடுங்கள். அவர் விரும்பிய தேதியிலேயே விரைவாக சந்திக்கும் வகையில் நேரம் கொடுங்கள். எந்த தேதி முன்னால் வருகிறதோ அதையே கொடுக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியதாக கூறப்படுகிறது,

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் நாளையே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் பெற்றுள்ளார். நாளை மாலை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இவர்கள் சந்திக்க 30 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீட் விலக்கு மசோதா, காவிரி விவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
What was PM Modi reaction to giving an appointment to TN CM Stalin in Delhi? முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ள நிலையில் நாளை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X