ஆஹா.. எழுதி இருந்ததை நோட் பண்ணீங்களா? ஆளுநரின் தேநீர் விருந்தில் இருந்த "போர்ட்".. சீறி வரும் திமுக!
சென்னை: நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த போர்ட் ஒன்று இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பலர் இந்த போர்ட் குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாடு முழுக்க நேற்று 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றினார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் நேற்று கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அதன்பின் மாலையில் ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆர். என் ரவி நேரில் சென்று வரவேற்றார். அதேபோல் மேடையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் இவர்களுக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வமிற்கும் முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது.

என்ன நடந்தது?
இந்த நிலையில் இரண்டாம் வரிசையில் அதிமுகவின் மற்ற தலைகளுக்கு இடம் தரப்பட்டது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த போர்ட் ஒன்று இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போர்ட் ஒன்றில் பாஜக கட்சியினர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாஜக
அதாவது அரசியல் கட்சி தலைவர்கள் / பாஜகவினர் இங்கே அமரலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மற்ற கட்சிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் பாஜகவின் பெயரை மட்டும் குறிப்பிட்டது ஏன். பாஜகவிற்கு மட்டும் தனியாக போர்ட் வைத்தது ஏன். அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஏற்பாடு ஏன் என்ற கேள்வியை இணையத்தில் பலரும் எழுப்பி வருகின்றனர். திமுகவினர் பலர் இந்த போர்ட் குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வரவில்லை
அது என்ன பாஜகவிற்கு மட்டும் சிறப்பு மரியாதை. ஆளுநர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் தானே. ஏன் பாஜகவிற்கு மட்டும் போர்ட் வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று நடந்த நிகழ்வில் இத்தனைக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. பாஜக சார்பில் துணை தலைவர் விபி துரைசாமி மட்டுமே கலந்து கொண்டார். அப்படி இருக்கும் போது பாஜகவிற்கு மட்டும் சிறப்பு கவனிப்பு ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications