Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதவ் அர்ஜுனா மீது வில்லிவாக்கம் சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் என்ன.. இறுதியாக ஏற்கப்பட்டது எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மனைவி பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவன பங்குகளை மறைத்து மனு தாக்கல் செய்துள்ளதாக சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆதவ் ஆதவ் அர்ஜுனா மனுவை தேர்தல் அதிகாரி இன்று காலை நிறுத்தி வைத்தார். எனினும் மாலையில் ஏற்றுக்கொண்டார்.

த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜி. தேவராஜன் என்ற சமூக ஆர்வலர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

What was the complaint filed by the independent candidate from Villivakkam against Aadav Arjuna

அந்த புகாரில் அவர் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு.36(2)ன் கீழ் வேட்பு மனு பரீசிலனையின் போது தான் எழுப்பிய வாய்மொழி ஆட்சேபனைகளின் தொடர்ச்சியாக எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளை அளிக்கிறேன்.

தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுப் படிவங்களில் தகவல்களை வெளியிடாமலும், மறைத்தும் உள்ளதை எனது ஆட்சேபனைகள் மூலம் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 33 A மற்றும் B-இன் படி, ஒரு வேட்பாளர் தனது குற்றப் பின்னணிகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், மற்றும் அவரது துணைவியார் தொடர்பான முழுமையான, சரியான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவரது கடமையாகும். ஆனால், வேட்பாளரான ஆதவ் அர்ஜுனா, முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதனை உங்கள் கவனத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்..

2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன்
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன்

ஆதவ் அர்ஜுனாவின் மனைவியான திருமதி. டெய்சி ஆதவ் அர்ஜுனா தற்போது இயக்குநராகப் பணிபுரியும் நிறுவனத்தில், பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் ஆகும். இயக்குநர் திருமதி. டெய்சி ஆதவ் அர்ஜுனா வைத்திருக்கும் பங்குகள் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் ஆகும். ஆனால் அவை இன்னும் வெளியிடப்படவில்லை

ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவத்தின் 26-ஆம் படிவத்தில் வெளிப்படுத்தியிருப்பது, முக்கியத் தகவல்களை மறைத்தல் மற்றும் வேண்டுமென்றே வெளியிடாமல் இருத்தல் ஆகும். எனவே, தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான திரு. ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும்..

மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,,
மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்
மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்,,
மார்ட்டின் டுவெல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன்,
உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பட்டியலை அளித்துள்ளார்..

மேலும், மேற்கூறிய நிறுவனங்களின் பல சொத்துக்கள், PMLA சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனச் சொத்துக்களும், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதிகளும் அமலாக்கத்துறையின் முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பஹ்ரைன் நாட்டின் உயிர்நாடி.. சவுதி அரேபியா உடன் இணைக்கும் 25 கிமீ பாலம்.. உடனடியாக மூடப்பட்டது
பஹ்ரைன் நாட்டின் உயிர்நாடி.. சவுதி அரேபியா உடன் இணைக்கும் 25 கிமீ பாலம்.. உடனடியாக மூடப்பட்டது

அதேபோல், மார்ட்டின் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்தின் முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறிய உண்மைகள் அனைத்தையும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவங்களில் வேண்டுமென்றே மற்றும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளார். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்படத் தகுதியானது" என சுயேட்சை வேட்பாளர் ஜி.தேவராஜன் என்பவர் கூறியிருந்தார். இந்த ஆட்சேபனை காரணமாக அதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனாவின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் விசாரணைக்கு பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+