2 டார்கெட்.. "ரரக்களை" அழைத்த இபிஎஸ் - ஓபிஎஸ்.. தொடங்கிய அதிமுக மா.செக்கள் கூட்டம்! இதுதான் பின்னணி!
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10. 30 மணிக்கு ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடக்க உள்ளது.
பெரும் பரபரப்பிற்கு இடையில் அதிமுக கூட்டம் இன்று நடக்க உள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

அதிமுக கூட்டம்
இன்று நடக்கும் இந்த கூட்டத்தின் முதல் நோக்கம், பொதுக்குழு தொடர்பானது. வரும் 23ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அவை தலைவரை தேர்வு செய்ய ஆலோசனை செய்யப்பட உள்ளது. தற்போது அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் இருக்கிறார். இவரின் பதவியை கைப்பற்ற அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் முயன்று வருகின்றனர். ஆனால் மூத்த நிர்வாகிகளுக்கு இந்த பதவி வழங்கப்படாமல்.. தமிழ் மகன் உசேனுக்கே தொடர்ந்து இந்த பதவியில் இருக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு
23ம் தேதி இந்த கூட்டம் நடக்க உள்ள நிலையில், அதை பற்றி இன்று ஆலோசனை செய்ய உள்ளனர். பொதுக்குழுவில் என்ன பேசலாம் என்பது தொடர்பாக மாவட்ட செயலர்களிடம் இரட்டை தலைமை விசாரிக்க உள்ளது. மாவட்ட செயலாளர்களின் குறைகளை இன்று நிர்வாகிகள் கேட்பார்கள். பின்னர் அதை பொதுக்குழுவில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆளும் திமுக தரப்பிற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. மாவட்ட செயலர்கள் தவிர்த்து இன்னும் சில மூத்த ரத்தத்தின் ரத்தங்களுக்கும் இந்த மீட்டிங் அழைப்பு சென்றுள்ளது.

குறிக்கோள்
இரண்டாவது குறிக்கோள், குடியரசுத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவது ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றி அதிமுக நிர்வாகிகள் இன்று ஆலோசனை செய்ய உள்ளனர். சமீபத்தில் திமுக தொடர்பாக இது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. திமுக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பளாருக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக - பாஜக
அதிமுக - பாஜக இடையில் உறவு சுமுகமாக இல்லை. கடந்த சில வாரங்களாக அதிமுக பாஜக கூட்டத்தில் நிறைய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் கூட்டத்தில் பாஜக - அதிமுக இடையிலான மோதல், கூட்டணியில் என்ன செய்யலாம் என்று பேச உள்ளனர். அதோடு குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் காலை10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications