நாளை அனல் பறக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்?.. யார் யாருக்கு கொட்டு விழும்?
சென்னை: நாளை நடைபெறவுள்ள அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து பேசுவதற்கு பதிலாக பாஜக குறித்து அதிகம் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளை பிடிக்க அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் என்பது மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்டவைகளை நிர்வாகம் செய்ய நடத்தப்படும் ஒரு தேர்தலாகும். இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகளை கவனிப்பர்.

திமுக தேர்தல்
இந்த தேர்தலில் திமுக எப்படியாவது வெல்ல வேண்டும் என ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அது போல் சட்டசபை தேர்தலில் விட்டதை உள்ளாட்சி தேர்தலில் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் முட்டி மோதுகிறது. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்த நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அதிமுக நடத்துகிறது.

தீர்மானம்
இதில் தேர்தல் நடக்கவிருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை எப்படி பகிர்ந்து கொள்வது, உள்ளாட்சி தேர்தலில் எப்படி வெல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த தீர்மானித்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக, அதிமுக கூட்டணியில் பாஜகவை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பாஜக கூட்டணி தொடரும்
சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் பாஜகவுடனான கூட்டணி என சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் "அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும்". இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.

விவாத பொருளான பாஜக
நீங்கள் தான்.. இல்லை நீங்கள்தான்.. என ஒவ்வொருவரும் மாறி மாறி பேசிக் கொண்டதால் அதிமுக- பாஜக இடையே பிளவுப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியிலிருந்து கொண்டு அதிமுக கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காதது அதிமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாளை நடைபெறும் கூட்டத்தில் பாஜக குறித்தே அதிகம் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி












Click it and Unblock the Notifications