தமிழக அரசுக்கு பின்னடைவு? ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நடக்கும் எதிர்பார்க்காத மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மசோதாக்களில் முடிவெடுப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றிய ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் ஆளுநர் மசோதா மீது முடிவெடுப்பது குறித்து நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில், இது தொடர்பாகத் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்பு தொடர்பாகக் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக் குறிப்பை அளித்திருந்தார்.

What will be the change for Tamil Nadu After Supreme court order on Governors Bill Assent Powers

உச்ச நீதிமன்றம்

அது தொடர்பான வழக்கிலேயே தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தீர்ப்பில் அரசியல் சாசன அமர்வு கூறிய பல கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்பு கடந்த ஏப்ரலில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், மசோதாவுக்கு நீண்ட காலம் ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்ததால் அது 'நிறைவேறியதாக' (deemed to have passed') கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டது.. இருப்பினும், இன்றைய தினம் வழங்கிய தீர்ப்பில் அப்படி நிறைவேறியதாகக் கருத முடியும் என நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு இல்லை

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வேறு சில விஷயங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது ஒரு மசோதா ஆளுநரிடம் அனுப்பப்படும்போது, அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கோ அல்லது திருப்பி அனுப்புவதற்கோ ஆளுநருக்குக் காலக்கெடு இல்லை எதுவும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இது முக்கியம்!

இந்த இரு விளக்கங்களும் மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. அதாவது தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில், அது ஒப்புதல் அளித்தாகக் கருதப்படும் என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது வெளியான உச்ச நீதிமன்றத்தின் புதிய விளக்கம், அதுபோலக் கருத முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், ஆளுநருக்குத் தன்னிச்சையான அதிகாரம் உள்ளது என்றும், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த பாயிண்டுகள் தான் ரொம்ப முக்கியம்.! இதனால் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது.

10 மசோதாக்கள்

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "ஒரு பின்னடைவு இல்லை.. ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ள ஆளுநர்கள் மசோதாக்களை உடனடியாக முடிவெடுப்பார்கள். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்கள், திமுக அரசால் இரண்டு முறை நிறைவேற்றப்பட்டவை. இவை மீண்டும் ஆளுநர் ரவியிடம் போகலாம்" என்றார்.

அதாவது ஆளுநர் காலதாமதம் செய்ததால் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் முன்பு கூறியிருந்தது. ஆனால், புதிய விளக்கத்தின்படி அப்படிக் கருத முடியாது என்றும் காலக்கெடுவும் விதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. இதனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+