தீபாவளி வந்தாச்சு.. இப்போ சொல்லுங்க.. "தங்கம்" வாங்கலாமா! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மிக முக்கிய மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நாம் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில், இந்த நேரத்தில் தங்கத்தை வாங்குவது சரியாக இருக்குமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.

தங்கம் எப்போது ஆபத்தான நேரத்தில் பொதுமக்களைக் காக்கும் சேமிப்பு கருவியாகவே இருக்கிறது. அதேநேரம் இப்போது சிலர் தங்கத்தைக் காட்டிலும் மற்ற சேமிப்பு கருவிகளில் முதலீடு செய்தால் அது லாபம் என்கிறார்கள். இதற்கிடையே இது குறித்து பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

 What will be the moment of Gold in upcoming days explains Aanand Srinivasan

ஆனந்த் சீனிவாசன்: அவர் இது குறித்துக் கூறுகையில், "தீபாவளி வந்தாச்சு.. இப்போது நாம் தங்கம் குறித்துப் பார்க்கலாம். இப்போது 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5600 என்ற ரேஞ்சில் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வல்லுநர்கள் என்று இருக்கும் பலரும் தங்கம் வாங்குவது வேஸ்ட். தங்கம் வாங்கினால் உங்களுக்கு லாபம் இல்லை. நீங்கள் ஏமாந்து போவீர்கள் என அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான்.. ஒவ்வொரு நபரும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை ஆத்திர அவசரத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் லாபம் எந்தளவுக்குக் கிடைக்கிறது என்பதை ஒப்பீட்டுச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இந்த தரவுகளை வைத்துப் பார்க்கும் போது கடந்த மாதம் தங்கம் விலை 8.4% உயர்ந்துள்ளது. அதேநேரம் சென்செக்ஸ் 3.2% குறைந்துள்ளது. இது குறுகிய கால நிகழ்வு என்று நீங்கள் சொல்லலாம்..

தங்கம்: நீண்ட காலத்திலும் லாபம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். கடந்த 2021 அக். முதல் 2023 அக். வரை இரண்டு ஆண்டுகளில் தங்கம் 28% லாபத்தைத் தங்கம் கொடுத்துள்ளது. அதேநேரம் சென்செக்ஸ் வெறும் 7.7% லாபத்தை மட்டுமே கொடுத்துள்ளது. ஒரு ஆண்டு, 3 ஆண்டு என்று அனைத்திலும் தங்கத்தில் தான் அதிக லாபம் கொடுத்துள்ளது. அவ்வளவு ஏன் 5 ஆண்டு தரவுகளை எடுத்துப் பார்த்தாலும் தங்கம் சென்செக்ஸை தோற்கடித்துள்ளது.

எனவே, தங்கம் இல்லை என்றால் சேமிப்பு முழுமை பெறுவது கடினம்.. தீபாவளி தினம் என்பதால் தங்கம் வாங்குங்கள் என்று நான் சொல்லவில்லை. எப்போது வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம் என்பதைத் தான் நான் சொல்கிறேன். அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கம் விலையில் பெரியளவில் ஏற்றம் இருக்காது. மிகக் குறைவாகவே தங்கம் விலையில் ஏற்றம் இருக்கும்.

அமெரிக்க மத்திய வங்கி: 18 மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கிய உடன் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும். அடுத்தாண்டு இரண்டாம் பாதியிலேயே இந்த விலையேற்றத்திற்கான என்ஜினை ஸ்டார்ட் செய்துவிடுவார்கள். இரண்டு முறை வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள். அதாவது அடுத்த தீபாவளியில் தங்கம் என்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும்.

எனவே, அதுவரை தான் டைம்.. எவ்வளவு தங்கம் முடியுமோ அவ்வளவு தங்கத்தை வாங்கி வைய்யுங்கள். சிலர் தங்கம் வாங்கினால் அதற்குச் செய்கூலி தேசராம் எல்லாம் கொடுக்க வேண்டுமே என்பார்கள். இந்த கவலை உங்களுக்கு இருந்தால் கோல்ட் பீஸாக தங்கத்தை வாங்கலாம் அல்லது தங்க காயினாக வாங்கலாம். இப்படித் தங்கத்தை வாங்கப் பல வழிகள் இருக்கிறது.

இந்திய ரூபாய் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் சரிவடைந்து வரும் என்பதால் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் தங்கம் விலை மிக வேகமாக அதிகரிக்கும். எனவே, ஆபத்தான காலத்தில் எப்போதும் நமக்குத் தங்கம் தான் உதவும். இதை நான் சும்மா சொல்லவில்லை. நம்மிடம் டேட்டாவும் இருக்கவே செய்கிறது. அதைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். பங்குச் சந்தையில் 10, 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் மட்டுமே தங்கத்தை விட லாபம் அதிகமாக இருந்துள்ளது.

 What will be the moment of Gold in upcoming days explains Aanand Srinivasan

உலகில் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது தங்கம் விலை அதிகரிக்கும். வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது தங்கம் விலை அதிகரிக்கும். இன்னும் ஒரு முறை வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என நான் நினைக்கிறேன். அதன் பிறகு ஓராண்டு அப்படியே வைத்திருப்பார்கள். ஓராண்டிற்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கும். ஆபத்தான காலங்களில் தங்கம் எப்போதும் உதவும் என்பதை மறக்க வேண்டும்" என்றார்.

இது ஒரு சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+