இனியும் அவரை விட்டுவைக்க கூடாது.. சிஎஸ்கேவில் சாட்டையை சுழற்றும் தோனி? முக்கிய வீரருக்கு நோ? பின்னணி
சென்னை: சிஎஸ்கே அணியில் இன்று முக்கியமான ஒரு வீரர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில உள்ளது.

இதுவரை 8 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே சீசனில் ராஜஸ்தானிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி மீண்டும் ராஜஸ்தானிடம் கடைசியாக நடந்த போட்டியில் வீழ்ந்தது.
சிஎஸ்கே பேட்டிங்
இன்று பஞ்சாப்பிற்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதன்படி சிஎஸ்கேவின் டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. ஓப்பனிங் வீரர் ருத்துராஜ் சிறப்பாக ஆடி வருகிறார். கான்வே பார்மில் இருக்கிறார். ரஹானே சர்ப்ரைஸ் எண்ட்ரியாக வந்து அதிரடி காட்டிக்கொண்டு இருக்கிறார்.
துபே சிஎஸ்கே மிடில் ஆர்டருக்கு புதிய பலம் கொடுத்து உள்ளார். மொயின் விரைவில் பார்மிற்கு வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மற்றும் எம்.எஸ். தோனி என்ற டாப் ஆர்டரில் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோல் ஜடேஜாவும் காயம் எதுவும் இல்லாத காரணத்தால் தொடர்ந்து ஆடுவார். இவரை தவிர சிசண்டா மகலா, பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று பேருக்கும் காயம் சரியாகவில்லை. அவர்கள் இந்த மேட்சில் ஆட வாய்ப்பே இல்லை.
பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.
ஆனால் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரின் பேட்டிங் பார்மில் இல்லை. பவுலிங்கும் பெரிய பார்மில் இல்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் சாண்ட்னர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
சிஎஸ்கே பிட்ச்
இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.
இவர் சிஎஸ்கே பிட்சில் நன்றாக ஆடுவார் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம்.
பிளேயிங் லெவன் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியில் பின் வரும் வீரர்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.
1. டெவோன் கான்வே
2. ருதுராஜ் கெய்க்வாட்
3. அஜிங்க்யா ரஹானே
4. எம்.எஸ் தோனி (சி & வி.கே.)
5. சிவம் துபே
6. ரவீந்திர ஜடேஜா
7. தீக்சனா
8. மிட்செல் சான்ட்னர்
9. மதீஷ பத்திரன
10. துஷார் தேஷ்பாண்டே
11. ஆகாஷ் சிங்
ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.
சிஎஸ்கே வெற்றி விவரம்:
ஐபிஎல் 2023 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அடுத்து புனேவிற்கு எதிராக நடந்த போட்டியில் வென்றது.
இதையடுத்து மும்பைக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது.
முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
இப்படி வரிசையாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த சிஎஸ்கே 4வதாக நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்து நடத்த பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றது. சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்தது
தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். 45 பந்தில் கான்வே 83 ரன்கள் ஒரு பக்கம் எடுத்தார்.
அதன்பின் இறங்கிய ஆர்சிபி அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க, கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
அதன்பின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வென்ற சிஎஸ்கே கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications