2வது நாள்.. பிசு பிசுக்க போகுது.. சென்னை வானிலையில் அதிரடி மாற்றம்.. வல்லுனர் ஸ்பெஷல் வார்னிங்
சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் சென்னையிலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் இன்று அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஓடிசா-மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருக்கும் நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இது மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது. முக்கியமாக சென்னையில் நேற்று பெரிதாக வெயில் அடிக்கவில்லை.
பகல் நேரத்தில் நேற்று 33 டிகிரி செல்ஸியஸ் வரை மட்டுமே வெயில் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது
இந்த மழைக்கு இடையே சென்னையில் ஆங்காங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக சாரல் மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது.
தமிழ்நாடு மற்றும் சென்னை வானிலை அறிக்கை: சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், வானிலையை பொறுத்தவரை சென்னையிலும் தமிழ்நாட்டிலும் இன்று பெரிதாக மழை இருக்காது.
ஆனாலும் லேசான மழை சென்னை மற்றும் தமிழ்நாடு முழுக்க பெய்யும் வாய்ப்பு உள்ளது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. மேற்கு கடலோர மாவட்டங்களில் மழை கால மேகங்கள் ஆக்டிவாக உள்ளன. இதனால் தென் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்கள் மழையை பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.
நேற்று சென்னையில் வானிலை ஏன் அவ்வளவு ஈரப்பதத்துடன், பிசுபிசுப்புடன் காணப்பட்டது என்று பலரும் நினைக்கலாம். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னையில் மழை மற்றும் சூறாவளி அடிக்காத சமயங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 28 - 29 டிகிரி செல்ஸியஸ் இருக்கும்.
அதுவே மழை பெய்யும் போது வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸ் ஆக குறையும். இதன் காரணமாகவே ஈரப்பதம் அதிகரிக்கிறது. இன்றும் சென்னையில் வானிலை
ஈரப்பதத்துடன், பிசுபிசுப்புடன் காணப்படும், என்று சென்னை ரெயின்ஸ் கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications