அடடா மொத்தமாக மாறுதே.. சென்னையில் இன்று மழை பெய்யுமா? தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் என்ன நடக்கும்?
சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்தே சென்னையில் கனமழை விடாமல் பெய்து கொண்டு இருந்தது. அதிகாலை 7 மணிக்கு பின் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 1 மணி நேரம் விட்ட மழை மீண்டும் 8 மணிக்கு தொடங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக 12 மணி வரை மழை பெய்தது. மீண்டும் 2 மணி நேரம் விட்ட மழை இப்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருந்தது.

முக்கியமாக சென்னையில் 10 நாட்களாக விடமால் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது. இந்த நிலையில் தற்போது திடீரென சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு புரட்டி எடுத்த மழை இன்று அதிகாலை குறைந்துள்ளது. தற்போது மழை இல்லாத லேசான வெயில் நிலவி வருகிறது.
சென்னையில் மழை விட்டாலும் இப்போதும்செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.
வானிலை: சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகங்கள் இன்றி காணப்படுகிறது. சென்னை மேலே மேகங்கள் இல்லை. அதே சமயம் வட உள் மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பெல்ட், அதேபோல் டெல்டா மாவட்டங்களில் மழை மேகங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் கொஞ்சம் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்று சிலர் தீவிரமாக வேண்டி இருக்கிறார்கள் போல.

அதனால் சென்னையில் கடலோர பகுதிகளில் மட்டும் ஆங்கங்கே விட்டு விட்டு மழை பெய்யும். சென்னை முழுக்க மழை பெய்ய வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தெற்கு டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும். இன்னொரு பக்கம் வடக்கு டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பகுதிகளை நோக்கி மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன. வடகிழக்கு பகுதியில் இருந்து இங்கே மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இருக்கும் பல உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். மழை மேகங்கள் மெதுவாக நகர்ந்து வருவதால் மழைக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications