சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் அடி "இவங்களுக்குத்தான்.. ரஜினி கட்சி ஆரம்பிக்காவிட்டால்.. பரபரக்கும் அரசியல் கட்சிகள்!

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காவிட்டால் என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பிக்காவிட்டால், அடுத்தடுத்து தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாறுதல்கள் ஏற்படும்? ஒவ்வொரு கட்சியின் அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் நிகழுமா? அதனால் வரபோகும் தேர்தலில் தாக்கங்கள் உருவாகுமா? என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இப்போதைக்கு ரஜினிக்கு உடம்பு சரியில்லை.. ரெஸ்ட்டில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்.. தொற்று ஏற்படாதவாறு பார்த்து கொள்வது, கொரோனாவின்புது வைரஸ் பரவி வரும் சூழலில் சாத்தியமில்லை..

இன்னும் தடுப்பூசியும் வந்து நமக்கு சேரவில்லை. இது எல்லாவற்றையும்விட ரஜினியின் உடல்நலம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது.

 அரசியல் போக்கு

அரசியல் போக்கு

ஆக, ரஜினி ஒருவேளை கட்சி ஆரம்பிக்காமல் போனால், என்ன நடக்கும்? காரணம், ரஜினி கட்சி ஆரம்பித்தால் தமிழக அரசியலில் போக்கு, கட்சி ஆரம்பிக்காவிட்டால் மற்றொரு போக்கு ஏற்படும் என்று ஏற்கனவே அரசியல் நோக்கர்கள் சொல்லி இருந்தனர். கட்சி ஆரம்பிப்பதானால் நிச்சயம் பாஜக கூட்டணி வைக்கும், அல்லது கமல், பாமக, தேமுதிக, அமமுக, போன்றவைகளும் ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

செல்வாக்கு

செல்வாக்கு

கட்சியே ஆரம்பிக்காத பட்சத்தில்தான், யாருக்கு எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்று தெரியவில்லை.. இதில் முதலில் பாதிக்கப்படுவது பாஜகவாகத்தான் இருக்க முடியும்.. இவ்வளவு காலம் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நிலையில், பாஜகவுக்கு தமிழகத்தில் வலுவூன்ற ஒரு பிடி தேவைப்படுகிறது.. அது ரஜினியின் செல்வாக்காக இருந்தால், பாஜகவுக்கு இன்னும் வசதிப்படும்.

பாஜக

பாஜக

சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கியே தீர வேண்டிய கட்டாயத்தில் தமிழக பாஜக உள்ளது.. என்னதான் அதிமுகவை உருட்டி மிரட்டி நெருக்கடியில் தள்ளினாலும், அதிமுக இல்லாமல் பாஜக யாருடனும் கூட்டணி வைக்கவே முடியாது என்பதுதான் சூழல்.. ரஜினி வந்தால் பாஜகவுக்கு வேலை ஈஸியாக இருந்திருக்கும்.. அது இல்லாத பட்சத்தில் அதிமுகவுடன்தான் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகும்.

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

அதேபோலதான் பாமகவும்.. ரஜினி கட்சி ஆரம்பித்தால், பாமகவின் நிறைய கோரிக்கைகளை ரஜினியை வைத்தே நிறைவேற்ற யோசித்திருந்தது.. அதற்காகவே ரஜினியின் மீதான பழைய காழ்ப்புணர்ச்சியையும்கூட மறந்து வந்தது.. இப்போது திமுகவின் கதவு அடைக்கப்பட்டு விட்டதாலும், ரஜினியும் கட்சி ஆரம்பிக்காத பட்சத்திலும், அதிமுகவுடன்தான் கூட்டணி சேர வேண்டிய நிர்ப்பந்தம் பாமகவுக்கு ஏற்பட்டுள்ளது. இது அத்தனையும் தேமுதிகவுக்கும்தான் பொருந்தும்.

 3வது அணியா?

3வது அணியா?

இப்போது கமலுக்குதான் சிக்கல் அதிகமாகும் என தெரிகிறது.. அதிமுக, திமுக என யார் பக்கமும் அவரால் போக முடியாது.. ஈகோவை விட்டுவிட்டு அழைக்கிறேன் என்றுகூட கமல் சொல்லியாயிற்று.. ஆனால், ரஜினி கட்சியே ஆரம்பிக்காத பட்சத்தில் 3வது அணிதான் அமைத்தாக வேண்டும்.. அப்படி அமைந்தால், அதில் பாமக, அமமுக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், தேமுதிக, போன்றவைகள் இணையுமா என்பதும் எதிர்பார்ப்புதான்!

English summary
What will change in TN Politics if the Rajinikanth Party does not start
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X