ஸ்டாலின் கணக்கு என்ன.. "அவர்"தான் அடுத்த குறியா?.. திருப்பங்களை தருமா கொங்கு.. காத்திருக்கும் திமுக!
பொள்ளாச்சியில் அடுத்தக்கட்ட களப்பணியில் திமுக இறங்கி உள்ளது
சென்னை: பொள்ளாச்சி வழக்கின் விசாரணையை முடிக்க ஹைகோர்ட் கெடு விதித்துள்ளதால் அதிமுக தரப்பில் படபடப்பு எகிறி உள்ளது.. இப்படிப்பட்ட நிலையில், தன் தரப்பை ஸ்கோர் செய்ய திமுக மும்முரமாகி இருப்பதால், கொங்கு மண்டலத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.
கடந்த மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "அதிமுக ஆட்சி காலத்தில்தான் பலாத்கார வன்முறை சம்பவங்கள் எல்லாம் ஊக்குவிக்கப்பட்டன.. அதுதான் பிரச்சனை.. பொள்ளாச்சி சம்பவத்திலேயே அந்த அரசு நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்ந்திருக்காது..
ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த தவறுகளை ஒட்ட நறுக்கும். முதலில், இதுபோன்ற பாலியல் சமாச்சாரங்களில் சாதி, மதம், அரசியலை கலக்கவே கூடாது.. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் அவ்வளவுதான்..!" என்றார்.

ஹைகோர்ட்
முத்தரசன் அன்று சொன்னதுதான் இன்று நடந்து வருகிறது.. பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதத்தில் முடிக்க சொல்லி ஹைகோர்ட் கெடு வைத்திருந்தாலும், திமுக இந்த விஷயத்தில் தனித்த கவனத்தை செலுத்தி வருகிறது..

அதிருப்தி
இப்படி ஒரு கொடுமையான பலாத்காரங்கள் நடந்தும்கூட, பொதுமக்களின் அதிருப்திகளை கடந்தும்கூட, பொள்ளாச்சி தொகுதியில், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இந்த முறை வெற்றி பெற்றது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. இந்த விஷயத்தில் ஸ்டாலின் சற்று அப்செட் என்றுகூட தகவல்கள் கசிந்தன.. அதிமுக வெற்றிக்கு காரணம் என்ன? என்ற ஆராய்ந்தபோதுதான், திமுகவின் உட்கட்சி பூசல் ஒரு முக்கியமான காரணம் என்பது தெரியவந்தது.

ஆச்சரியம்
கடந்த ஆட்சியில் அதிருப்தி அலை இருந்த போதும், அதிமுக இப்போது வரை கொங்கு மண்டலத்தை கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யம்தான்.. கொங்கு மண்டலத்தில் இருந்து எத்தனையோ புகார்கள் அன்றைய தினம் அறிவாலயத்துக்கு சென்றும் அதன்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பிரச்சார நேரத்தில் பொள்ளாச்சியில் அதிக அளவு திமுக தன் கவனத்தை திருப்பியது..

பொள்ளாச்சி ஜெயராமன்
குறிப்பாக உதயநிதி பொள்ளாச்சி சென்றபோதெல்லாம் பாலியல் கொடுமை பற்றி பேசாமல் வந்ததே கிடையாது.. 4 கேள்விகளை நறுக்கென கேட்டுவிட்டுதான் சென்னை திரும்புவார்... "இந்த பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன். முடிந்தால் என் மீது கேஸ் போடுங்க" என்று சவால் விட்டவரும் உதயநிதிதான். ஒருமுறை தன் பிரச்சாரத்தில், 'எவ்ளோ திமிரு பாருங்க.. தலைவர் முதலமைச்சர் ஆனதும், அவனை உள்ளே தூக்கி போட்டு நுங்கு எடுக்க போறதே நாமதான்" என்று சொன்னதையும் மறக்க முடியாது.

வேலுமணி
ஆனால், தேர்தலில் பொள்ளாச்சி கையை விட்டு போனதுமே, உதயநிதி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியுள்ளார்.. "வேலுமணியை எதிர்த்து நான் சவால்விட்டேன்... தலைவரும் சவால் விட்டுட்டுப் போனாரு... ஆனா ஒரு தொகுதியையும் ஜெயிக்க முடியலையேனு ரொம்ப வருத்தத்துலயும் கோபத்துலயும் இருக்காரு... இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுங்க" என்று கிரவுண்ட் ரிப்போர்ட்டும் கேட்டிருந்ததாக தகவல்கள் கூறின.

அதிர்ச்சி
எனினும், தேர்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்துவிட்ட நிலையிலும், திமுக தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து அதிமுக அரசை விமர்சித்துதான் வருகிறது... இதன் முதல் விஷயமாக, பொள்ளாச்சியில் கவுண்டர் சமூகமும், தலித் மக்களும் அதிகம் வசிப்பதால், அவர்களை கவரும் வகையில் அதிரடிகளை செய்து, பொள்ளாச்சியை கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருகிறது.

லிஸ்ட்
அடுத்ததாக, பொள்ளாச்சியில் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.. அடுத்ததாக, உள்ளடி வேலை பார்த்தவர்கள் லிஸ்ட்டை திமுக தலைமை கேட்டுள்ளதால், அதற்கான பணிகளும் துரிதமாகி உள்ளதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, கோவை மேலிட பொறுப்பாளராக முக்கியமான நபரை நியமிக்கவும் யோசனையிலும் உள்ளது..
Recommended Video

கனிமொழி
ஏற்கனவே இது தொடர்பாக உதயநிதி மற்றும் கனிமொழியின் பெயர்கள் அடிபட்டன.. இப்போது வழக்கில் கோர்ட்டே கெடு வைத்துள்ளதால், அந்த 6 மாதத்தை தனக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் திமுக இறங்கி உள்ளதாக தெரிகிறது.. திமுகவை தோற்கடித்து அதிமுக வெற்றி பெற்றதற்கு "சாதி" பிடிமானமே அதிகம் என்ற பேச்சும் உள்ளதால், அதனை தன் செயல்பாடுகளால் திமுக வெல்லுமா? மக்கள் மனங்களை அள்ளுமா?.. பார்ப்போம்!
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications