சூரிய வெப்பம் சீண்டியது! சந்திரயான் 3 விக்ரம், பிரக்யான் கண் விழித்ததும் என்ன நடக்கும்? ஷாக் பின்னணி
சென்னை: சந்திரயான் 3 நிலவில் இன்னும் சற்று நேரத்தில் விழித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரன்டும் நிலவில் மீண்டும் விழித்துக்கொண்ட பின் என்ன நடக்கும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
நிலவில் மீண்டும் சூரியன் உதித்து உள்ளது. நிலவில் கடந்த 14 நாட்களாக மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.

சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது. செப்டம்பர் 2 ரோவரும், செப்டம்பர் 4 லேண்டரும் தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.
14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் நேற்று சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. பிரக்யான் ரோவரில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. விக்ரம் லேண்டரில் சூரியன் உதித்ததும் சார்ஜ் ஏற வேண்டும். அதன் ரிசீவர் ஆனில் உள்ளது. இன்று அது சார்ஜ் ஏறியதும் ரிசீவர் உதவியுடன் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும்.
நேற்று சூரியன் வந்தாலும் அது இன்னும் இயங்காமல் இருக்க காரணம்.. அங்கே இன்னும் முழு வெப்பம் வரவில்லை. அதில் உள்ள கருவிகள் வேலை செய்வதற்கு உகந்த சூரிய வெளிச்சம் இருக்க வேண்டும், இதற்கு சூரிய கோணம் 6° முதல் 9° வரை இருக்க வேண்டும். வெப்பநிலையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் உயர வேண்டும். இதனால் அதெல்லாம் நடக்க இன்று மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டும். அதன்பின்பே விக்ரம் சார்ஜ் ஏறி ஆன் ஆக வேண்டும். அதன்பின் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடன் தொடபு கொள்ள முடியும்.
சந்திரயான்-3 இன் லேண்டர், விக்ரம், அல்லது அதன் ரோவர், பிரக்யான் இரண்டுமே நிலவு பயணங்களுக்கான பொதுவான ஹீட்டர்கள் கொண்டு இருக்கவில்லை. அதாவது நடுங்கும் இந்த குளிரை தாக்கு பிடிக்க எந்த வசதியும் இரண்டிலும் செய்யப்படவில்லை. பொதுவாக ரேடியோஐசோடோப் ஹீட்டர் யூனிட்கள் (RHUs) எனப்படும் ஹீட்டர்கள், லேண்டர், ரோவர்களை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க, இது போன்ற கருவிகள் அவசியம்.
ஆனால் அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாமல், சந்திரயான் -3 இன் வாழ்க்கை என்பது சந்தேகம்தான். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமேதான் நிலவில் சந்திரயான் 3 தாக்கு பிடிக்கும். இதனால் தற்போது நிலவில் நிமிடங்கள் திக் திக் என்று நகர்ந்து கொண்டு இருக்கின்றன.
பல்வேறு கண்டுபிடிப்புகள்: இவை மீண்டும் விழித்த பின் என்ன நடக்கும் என்ற கேள்வி உள்ளது. மீண்டும் விழித்த பின் பிரக்யான் ரோவர் நகர்ந்தபடி மீண்டும் சோதனைகளை செய்யும். விக்ரம் லேண்டரில் கருவிகள் கீழே இறக்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கும். உதாரணமாக விக்ரமின் சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி உள்ளது. அதில் இதேபோல் 7 கருவிகள் உள்ளன. இவை எல்லாம் மீண்டும் நிலவில் இரக்கப்பட்டு மீண்டும் சோதனை செய்யப்படும். லேண்டரில் இருக்கும் நிலநடுக்கத்தை சோதனை செய்யும் sessimic கருவி, கனிமங்களை ஆய்வு செய்யும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி ஆகியவையும் நிலவில் இரக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.
ஒருவேளை இவை மீண்டும் வெற்றிகரமாக விழித்தால்.. 15 நாட்களுக்கு பின் மீண்டும் உறக்க நிலைக்கு சென்று அதன்பின் மேலும் 15 நாட்கள் கழித்து மீண்டும் விழிக்க வைத்து அப்படியே தொடர்ந்து செய்யப்படும். அதோடு நிலவில் இரவை கடந்து தூக்க நிலைக்கு சென்று மீண்டும் எழுந்த ஒரே கருவி என்ற சாதனையை விக்ரம், பிரக்யான் மீண்டும் பெறும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications