இ-சேவை மையம் போறீங்களா.. ஆதார் கார்டை 14ம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் என்னாகும்? அதிகாரி விளக்கம்
சென்னை: ஆதார் கார்டு இந்திய மக்களின் அடையாளமாக திகழும் நிலையில், அதுபற்றி தவறான தகவல் வேகமாக பரவி வருகிறது. வரும் செப்டம்பர் 14ம் தேதி வரை தான் ஆதார் கார்டை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த சூழலில் கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 55 லட்சம் பேர் ஆதார் கார்டை புதுப்பித்து உள்ளனர். ஆதார் கார்டை 14ம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் என்னாகும் என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஆதார் கார்டு தான் ஒருவரின் அடையாளம் என்று ஆகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, மகளிர் உதவி தொகை, விவசாயிகள் மானியம், சிலிண்டர் மானியம், பள்ளியில் சேர, கல்லூரிகளில் சேர, சாதி சான்றிதழ் வாங்க, அரசு பணிகளில் சேர ஒரு மனிதனின் அனைத்து வேலைகளுக்கும் இப்போது ஆதார் கார்டு அவசியமாகிவிட்டது.

இதன் காரணமாக அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. இந்நிலையில் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது ஏன் அவசியம் என்றால், பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். முகங்கள் 10 வருடங்களில் மொத்தமாக மாறி இருக்கும். ஆனால் ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ரேஷன் கடை, வங்கிகள் மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஆதார் கார்டு அப்டேட் செய்து 10 ஆண்டுகள் ஆன பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்எம்ஸ் அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகைகளை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் ஆதார் கார்டை புதுப்பிக்க 14-ந் தேதி வரை தான் கால அவகாசம் என்று தவறான தகவல் பரவியதால் இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதார் கார்டினை புதுப்பித்திருக்கிறார்கள். தற்போது உள்ள நிலவரம் என்னவென்றால், 14 தேதி வரை இலவசமாக ஆதாரை அப்டேட் செய்யலாம். அதன்பிறகு சிறிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதுதான் இந்த குழப்பத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆதார் கார்டினை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது மிகவும் நல்லது. அப்படி புதுப்பிக்காவிட்டாலும் ஆதார் கார்டு செயல்பாட்டில் தான் இருக்கும். ஆனால் இப்போது வருகிற செப்டம்பர் 14-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற தவறான வதந்தியை சிலர் பரப்பி வருகிறார்கள். அதாவது புதிய ஆதார் பதிவு செய்வது தவிர மற்ற அனைத்து ஆதார் சேவைக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஆதாரில் புகைப்படம் மாற்றுவது, கைரேகை-கருவிழி பதிவு செய்வது, முகவரி மாற்றம் செய்வது, பெயர்-பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரி மாற்றம் செய்தால் அதற்கு வருகிற 14-ந் தேதி வரை கட்டணம் இல்லை. இலவசமாக முகவரி மாற்றம் பதிவு செய்யலாம். 14-ந் தேதிக்கு பிறகு இதற்கும் மட்டும் வெறும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வளவு தான்..ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்டு ஆதார் மற்றும் இ-சேவை மையத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆதார் புதுப்பிக்க 14-ந் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தியாகும். எப்போது வேண்டுமானாலும், ஆதார் கார்டினை புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை" என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications