ஒரேயடியாக சரியும் எனர்ஜி! சட்டென தூங்க போகும் சூரியன்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டென இந்த உலகில் சூரியன் உறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? என்னங்க சொல்றீங்க.. சூரியன் எப்படி உறங்கும் என்று கேட்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள் புரியும்!

ஒவ்வொரு முறையும் சூரியன் குறித்தும், நட்சத்திரங்கள் குறித்தும், கிரகங்கள் குறித்தும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படும் போதெல்லாம் வியப்பு ஏற்படும். இதுவரை நமக்கு தெரியாத பல விஷயங்கள் ஒவ்வொரு நாளும் விண்வெளி துறையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் தற்போது சூரியன் பற்றி வெளியான கண்டுபிடிப்பு ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சூரியன் இந்த வருடம் முழுக்கவே மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளது.

பல சோலார் புயல்கள், சோலார் துகள், காந்த புயல்கள், சூரியனின் காந்த புல மாற்றம் என்று இந்த வருடம் முழுக்கவே சூரியனில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து உள்ளன.

ஆக்டிவ்

ஆக்டிவ்

இதற்கு முந்தைய வருடங்களை விட சூரியன் இந்த வருடம் அதிக ஆக்டிவாக இருந்துள்ளது. இப்படிப்பட்ட சூரியன் இதற்கு முன் அப்படியே ஆக்டிவ் இல்லாமல்.. தூங்கும் நிலைக்கு சென்றுள்ளது. தூங்கும் நிலை என்றால் சூரியனில் இருக்கும் சன் ஸ்பாட் எல்லாம் மறைந்து.. அதன் வெளிப்பகுதி பெரிதாக ஆரவாரம் இல்லாமல் வெறும் வெள்ளை நிற கிரகம் போல காட்சி அளிக்கும். இதை சூரியனின் தூங்கும் நிலை என்று அழைக்கிறார்கள்.

தூங்கும் நிலை

தூங்கும் நிலை

சூரியன் இப்படி தூங்கும் நிலைக்கு சென்றால் என்ன ஆகும் என்று கொல்கத்தாவை சேர்ந்த Indian Institute of Science Education and Research (IISER) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதில், சூரியன் பெரிதாக செயல்படாத நிலைக்கு செல்வதே தூங்கும் நிலை. அதாவது நாம் வாரம் முழுக்க பிஸியாக இருந்துவிட்டு ஒருநாள் தூங்கி வழிவோமே. அப்படி. சூரியனில் எந்த மாற்றமும் இல்லை, சோலார் கதிர்களில் மாற்றங்கள், சீரான வெப்பத்தோடு, ரியாக்சன் இல்லாமல் இருந்தால் அதுதான் தூக்க நிலை.

 என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

நாம் தூங்கும் போதிலும் நமது உடலில் உள்ளே உள்ள உறுப்புகள் இயங்குவது போலத்தான் சூரியன் உள்ளே இருக்கும் "கோர்" அதன் துருவங்கள் தொடர்ந்து ஆக்டிவாகவே இருக்குமாம். ஆனால் இது போன்ற நேரங்களில் சூரியனில் இருந்து வெளிப்படும் எனர்ஜி, துகள்கள் அளவு வெகுவாக குறையும். இதற்கு முன் சில முறை சூரியன் இப்படி தூங்கும் நிலைக்கு சென்றுள்ளது. சூரியனில் இருக்கும் சன் ஸ்பாட்கள் பல முறை அடியோடு மறைந்து தூங்கும் நிலைக்கு சென்றுள்ளது.

வெப்பம்

வெப்பம்

அப்போதெல்லாம் சூரியனில் இருந்து வெளிவரும் ஆற்றல் வெகுவாக குறைந்து இருக்கிறதாம். இது அடிக்கடி ஏற்படாது. சூரியன் உள்ளே நடைபெறும் காந்தப்புல விளைவுகள் குறைவாக இருக்கும் நேரத்தில் இப்படி நடக்கும். அப்போது சூரியனில் இருந்து ஆற்றல் குறைவாக வரும். ஆனால் இதனால் பூமி உள்ளே கிரகங்கள் அவ்வளவு பெரிதாக பாதிக்கப்படாது. கொஞ்சம் வெப்பநிலை குறைவாக இருக்கும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இருக்காது என்று விஞ்ஞானிகள் விளக்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+