Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கு மேலே கத்தி.. திமுக, அதிமுக, பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. சிக்க போகும் "சில் வண்டுகள்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக, அதிமுக, பாஜக கேம்பில் ஒரே நேரத்தில் அதீத பதற்றம் ஒன்று தொற்றி உள்ளதாம். மூன்று கட்சியிலும் சிலர் கடுமையான பதற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்களாம்.

தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

What will happen in AIADMK DMK and BJP Who will face the music in these parties

அதிமுக பதற்றம்: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.

இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் 10வது தொடர் தோல்வியாக அமையும். தென் மண்டலத்தில் வாக்குகளை இழந்தது, வடக்கு மண்டலத்தில் வலிமை இழந்தது, டெல்டாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்தது என்று அந்த கட்சி கடுமையான தோல்வியை தழுவி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அதிமுக கட்சி லோக்சபா 2024 தேர்தலில் பெரிய அளவில் இடங்களை குவிக்காது என்று கட்சி தலைமை தகவல்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். கண்டிப்பு காட்டி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார்.

திமுக பதற்றம்: 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வார் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும். உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக துணை முதல்வர்ஆவார் . புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

கூடுதலாக ஒரு சிறுபான்மையினர் அமைச்சர் சேர்க்கப்பட்டு ஒரு அமைச்சர் நீக்கப்படுவார். பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக உள்ளார். திமுக அமைச்சரவை மாற்றப்படலாம். அமைச்சர் பிடிஆருக்கு உயரிய பொறுப்பு ஒன்று அளிக்கப்படலாம். அதாவது அமைச்சரவையிலேயே உயரிய இலாக்கா வரும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ப்ரோமோஷன் கண்டிப்பாக கிடைக்கும். அமைச்சர் உதயநிதியிடம் உள்ள விளையாட்டு துறை மாற்றப்படலாம் என்கிறார்கள்.

பாஜக பதற்றம்: இன்னொரு பக்கம் பாஜகவில் இதேபோல் பதற்றம் தொற்றி உள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜகவில் டாப் தலைகள் தோல்வி அடைந்தால் பாஜகவின் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கடி ஏற்படும்.

பாஜகவில் மேலிடம் கொடுத்த பணத்தை நிர்வாகிகள் சரியாக செலவு செய்யவில்லை என்று புகார் உள்ளது. இப்போது தேர்தல் முடிவுகள் நெகடிவ்வாக வந்தால் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். முக்கியமாக எம்பி சீட் யாரும் பெறவில்லை என்றால் கண்டிப்பாக டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்.

இதனால் அதிமுக, திமுக, பாஜக உட்பட எல்லா கட்சிகளிலும் கண்டிப்பாக பதவி மாற்றங்கள், நீக்கங்கள் என்று பல சில் வண்டுகள் சிக்க போவதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+