கொளத்தூர் தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு! ஸ்டாலின் மீண்டும் சட்டசபைக்கு செல்வாரா? பிரபலம் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு அவருக்கு சாதகமாகுமா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் கொளத்தூர் தொகுதி வெற்றியை எதிர்த்து போடப்பட்ட கேஸ் மற்ற தொகுதிகளிலும் எதிரொலிக்குமா என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து மார்ஷல் மீடியா எனும் யூடியூப் சேனலுக்கு தராசு ஷியாம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

kolathur tvk

அதே வேளையில் சட்டசபையில் குதிரை பேரம் குறித்து அதிமுக- தவெக இடையே கடும் விவாதங்கள் நடக்கின்றன. இதெல்லாம் ரீப்பீட்! 2011 ம் ஆண்டு அதிமுக- தேமுதிக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு விஜயகாந்த் நாக்கை துறுத்திய பிறகு, 5 முதல் 6 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து பிரிந்து அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த வரலாறு 2026 ஆம் ஆண்டு திரும்பியுள்ளது. விஜயகாந்துக்கு அன்று அதிமுக செய்த துரோகம் இன்று அவர்களுக்கே நடக்கிறது. அதிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி குதிரை பேரம் குறித்தும் தங்கள் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததும் குறித்து அவர் ஆவேசம் பொங்க பேசியிருந்தார்.

இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்எல்ஏக்கள் ஆகிவிடலாம் என கருதியவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் தடை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருக்கும் வரை இடைத்தேர்தல் நடத்தவே முடியாது. இதனால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் என்ன செய்வது என தெரியாமல் மனக்குழப்பத்தில் உள்ளனர்.

இதோட எதிரொலிதான் வேலுமணி சட்டசபையில், "அண்ணன் எடப்பாடியார்..." என பேசியிருந்தது. கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முடிவுகளை எதிர்த்தும் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஒட்டப்படும் வரை அவரை சாதாரண இயந்திரங்கள்தான். எந்த பட்டனுக்கு நேராக எந்த வேட்பாளர் வருவார் என்பது கடைசி நேரத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது.

வாக்குப் பதிவின் போது சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம். அது தேர்தல் முடிவையே மாற்றக் கூடியதா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். கொளத்தூர் வழக்கு குறித்த விவாதம் அந்த ஒரு தொகுதிக்கு மட்டுமே தவிர மற்ற எந்த தொகுதிகளுக்கும் அதன் தாக்கம் ஏற்படும் என்பதை சொல்ல முடியாது.

இடைத்தேர்தலில் சிலருக்கு நல்லது நடக்கணும் என விஜய் கூறுகிறார், இது எப்படி, எல்லா கட்சிகளும் தங்கள் கட்சி ஜெயிக்கணும் என்றுதான் நினைப்பார்கள். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்ற வரலாறுகள் உள்ளன. எம்ஜிஆர் காலத்தில், கருணாநிதி காலத்தில் இடைத்தேர்தலில் தோற்றிருக்கிறார்கள். இதனால் அவர்களின் ஆட்சிகளுக்கு என்ன பங்கம் வந்தது?

ஒரு மாநில முதல்வரையோ அல்லது மாநில கட்சித் தலைவரையோ அகில இந்திய அளவிலான பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது சாத்தியமே இல்லாத ஒன்று. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை அதிமுக மோடியா, லேடியா என பிரச்சாரம் செய்தது தேசிய அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே விஜய்யை பிரதமர் வேட்பாளர் என கூறுவதெல்லாம் ரசிக மனோபாவம் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+