ஆசையாக இருந்தாரே அண்ணாமலை.. இப்படியா நடக்கணும்? தாமரையை உதிர வைத்த "நம்பர் கேம்".. அப்படியா?
சென்னை: அதிமுக கூட்டணிக்கு பாமக செல்ல போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. ஒருவேளை பாமக இப்படி அதிமுக கூட்டணிக்கு போகும் பட்சத்தில் அது பாஜகவிற்கு நம்பர் ரீதியாக பெரிய பின்னடைவாக மாறும் என்று தகவல்கள் வருகின்றன.
அதிமுக - பாமக கூட்டணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.

அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு வருகிறதாம். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 7 லோக்சபா சீட், 1 ராஜ்ய சபா சீட் என்று உறுதியாகி இருக்கிறதாம்.
இதை உறுதி செய்யவே சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தினாராம். இதில் பாமக அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாம். நாளை பெரும்பாலும் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
ராஜ்ய சபா: பாஜகவிடம் ராஜ்ய சபா சீட்டை பாமக கேட்டுள்ளது. ஆனால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த கூட்டணி படியவில்லை என்று தகவல்கள் வருகின்றன.
ஒருவேளை பாமக இப்படி அதிமுக கூட்டணிக்கு போகும் பட்சத்தில் அது பாஜகவிற்கு நம்பர் ரீதியாக பெரிய பின்னடைவாக மாறும் என்று தகவல்கள் வருகின்றன.
நம்பர் கேம்: பாமகவின் இந்த முடிவு கண்டிப்பாக பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்கும். வாக்கு சதவிகித ரீதியாக இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக பாமக கொங்கு மற்றும் வடமாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
பாமக 2021 சட்டசபை தேர்தலில் வாங்கிய வாக்கு சதவிகிதம் 3.80% தான். மொத்தமாக பார்த்தால் இது குறைவாக தோன்றினாலும் பாமக தொகுதி வாரியாக கணிசமான வாக்குகளை பெற்றது. 23 இடங்களில் பாமக போட்டியிட்ட நிலையில் அவர்களுக்கு 5 எம்.எல்.ஏக்கள் தான் கிடைத்தார்கள். அதே சமயம் 17 வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சதவிகித அடிப்படையில் பார்த்தால் பாமக மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளது.
இதில் கும்மிடிபூண்டி, பூந்தமல்லி (எஸ்சி), திருப்பூர், சோளிங்கர், காஞ்சிபுரம், ஆற்காடு, திருப்பத்தூர், பென்னாகரம், தருமபுரி , கீழ்பென்னாத்தூர், வந்தவாசி (எஸ்சி), செஞ்சி, மயிலம், சங்கராபுரம், மேட்டூர் , சேலம் மேற்கு, ஆத்தூர் , ஜெயங்கொண்டம் , விருத்தாச்சலம் , நெய்வேலி, மயிலாடுதுறை, கீழ்வேளூர் (எஸ்சி) உள்ளிட்ட 22 தொகுதிகளில் 20 சதவிகிதத்திற்கும் மேல் பாமக வாக்கு சதவிகிதம் பெற்றது. இதில் 15 தொகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பாமக பெற்று உள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர் போன்ற வட மாவட்டங்களில் 2021ல் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை விட அதிகம் எம்எல்ஏக்களை பெற்றது. அதிலும் சேலம் (9/10), தர்மபுரி (5/5) இடங்களை வென்றது.
இதற்கு காரணம் பாமகவின் வாக்குகள். சேலம், தருமபுரியை தூக்க அதிமுகவிற்கு உதவியாக இருந்ததே பாமகதான். பாமக இப்படி பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது , 30+ வாக்குகளை பெற்றதே அதிமுகவின் வெற்றிக்கு காரணம். முக்கியமாக வன்னியர்கள் அதிகம் உள்ள வடக்கு மண்டலத்தில் பாமக தீவிர ஆதிக்கம் செலுத்தியது.
பாமக தான் இரண்டாம் இடம் பிடிக்க போகும் கட்சியை தீர்மானிக்கிறது என்பது உறுதியாகிறது. பாமக இல்லையெனில் அதிமுக, பாஜக என்று எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சி பின்னடைவை சந்திக்கும்.
இப்போது பாமக, அதிமுகவிற்கு மீண்டும் போய்விட்டால் பாஜகவிற்கு கொங்கு பெல்ட் கூட கிடைக்க வாய்ப்பு குறைவாகும். அதிலும் வடக்கு மாவட்டங்களில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத சூழல் பாஜகவிற்கு ஏற்படலாம். என்ன நடக்கும்..அண்ணாமலை என்ன செய்வார் என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications