கடைசியில் தில்லாக தனித்து போட்டியிட போவது கமல்தான் போல?
எம்பி தேர்தலில் கமல் தனித்து போட்டியிட போகிறாரா?
சென்னை: கடைசியில் கமல் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் தெரியுமா?
ஆரம்பத்தில் இருந்தே அதாவது கமல் அரசியலுக்கு வந்தபோது இருந்தே, திமுகவுக்கு ஆதரவானவர் என்ற கருத்து எழ ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம், அதிக அளவு கமல் அதிமுகவை வறுத்தெடுத்ததுதான்.
ஆளும் தரப்பை கடுமையாக விமர்சிக்கவும், கண்டிப்பாக அவர் திமுகவுக்கு சாதகமாகத்தான் இருக்க போகிறார் என்றே அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் தன் மீது திமுக பிம்பம் விழுவதை கமல் சுத்தமாக விரும்பவில்லை. இதை உடைக்கவே கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் பங்கெடுக்காமல் தவிர்த்தார்.

வலிய போகவில்லை
அதுவும் இல்லாமல் ஊழலைதான் கமல் அப்போதிருந்து எதிர்த்து வருகிறார். இந்த ஊழல் புகாரில் திமுகவும் சிக்கியுள்ளது. இவ்வளவு காலம் ஊழலை எதிர்க்க பேசிவிட்டு, திமுகவுடன் கை கோர்க்க கமல் விரும்பவில்லை. கூட்டணி குறித்து இதுவரை கமல் வலிய போய் பேசாததற்கு முக்கிய, முதல் காரணமாக சொல்லப்படுகிறது.

கணக்கு வேறு
கமல் அன்று போட்ட கணக்கு வேறு, இப்போது நடப்பது வேறு. கமலின் அரசியல் கிராமங்களை முன்னிறுத்தியே பயணிக்க ஆரம்பித்தது. அதனால்தான் கிராம சபையே ஊர் ஊராக நடத்த ஆரம்பித்தார். எப்படியும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் மய்யம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது கமலுக்கு இரண்டாவது மைனஸ் ஆகும்.

பலம் கூடிவிடும்
சரி, கூட்டணியே வேண்டாம், தனித்து நிற்கலாம் என்றும் கமல் யோசித்ததுண்டு. அப்படி தனித்து நின்றால், தன் கட்சியின் செல்வாக்கு, பலத்தினை அறியலாம் என்றுகூட நினைத்தார். ஒருவேளை, தனித்து நின்று கமலுக்கு வாய்ப்பு குறைந்தால், அது எதிர்க்கட்சியினருக்கு மேலும் பலத்தை கூட்டிவிடும் என்றும் எண்ணுகிறார்.

நேரடியாக கூட்டணி
எனவே கமலின் கூட்டணி முடிவு என்னவென்றால், திமுகவுடன் நேரிடையாக கூட்டணி வைக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சியாக இருப்பது காங்கிரஸ். எப்படியும் ராகுல் தலைமையில்தான் ஆட்சி அமைய போகிறது. அதனால் இந்த முறை காங்கிரசுக்கு திமுக கணிசமான ஒருதொகுதியை ஒதுக்க உள்ளது.

வாய்ப்புகள் குறைவு
குறைந்தது 10 முதல் 15 வரை சீட்டுக்களை காங்கிரஸ் பெற்று கொள்ளும் என தெரிகிறது. அப்படி வாங்கும் சீட்டுக்களை காங்கிரஸ், கமலுக்கு ஒதுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது காங்கிரசுடன் கமல் என்று அந்த கூட்டணி அமையுமே தவிர, திமுக - கமல் என்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

முதல்வர் பதவி
ஏனெனில் திமுக, அதிமுக என்று எல்லா பிரதான கட்சிகளிலுமே கமலுக்கு ரசிகர்கள் உண்டு, அபிமானர்கள் உண்டு. அதுவும் இல்லாமல், பாராளுமன்ற தேர்தலை யோசித்து இப்போதைக்கு திமுகவுடன் சேர்ந்துவிட்டால், அது வரும் சட்டமன்ற தேர்தலின்போது தமக்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தி விடும் என்று கமல் நினைக்கிறார். இதற்கு முக்கிய காரணம், ஸ்டாலினும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதுபோலவே கமலும் முதல்வர் பதவியை எதிர்நோக்கி உள்ளார்.

கூட்டணி இல்லை?
அதனால் வரப்போகிற தேர்தலில் கமல் தனியாக நிற்கவும் வாய்ப்பு உண்டு, அல்லது காங்கிரசுடன் கமலுக்கு கூட்டணி இருக்கவும் வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் அதிமுக-பாஜகவுடன் நேரடியாகவும், திமுகவுடன் மறைவுமுகமாகவும் கமல் கூட்டணி வைக்க மாட்டார் என்பதே பொதுப்படையான கருத்தாக உள்ளது!!
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications