சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போனா வராது.. நல்ல சான்ஸை மிஸ் செய்ய நினைக்கும் ஸ்டாலின்.. இனியாவது சுதாரிப்பாரா?

திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவராக மாறும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin: நல்ல சான்ஸை மிஸ் செய்ய நினைக்கும் ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவராக மாறும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்துவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    லோக்சபா தேர்தலுக்கு முன் வரிசையாக நிறைய தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியானது. எந்த மாநிலத்தில் யார் மெஜாரிட்டி பெறுவார், மாநில கட்சிகள் எத்தனை இடங்கள் பெறும் என்பது குறித்து நிறைய கருத்து கணிப்புகள் வெளியானது.

    இதன்படி தற்போது அரசியல் தலைவர்களுக்கு ஒரு செய்தி போய் இருக்கிறது. அதாவது லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளின் கூட்டணி எதற்கும் மெஜாரிட்டி கிடைக்காது. மாநில கட்சிகள் நினைக்கும் நபர்தான் பிரதமர் ஆக முடியும்.

    ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ! ஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

    யார் நினைத்தால்

    யார் நினைத்தால்

    மாநில கட்சிகள் என்றால், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டிலும் இடம்பெறாத கட்சிகள்தான் இந்த முறை பிரதமரை தேர்வு செய்யும் என்கிறார்கள். அதாவது பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இப்போதே முடிவு

    இப்போதே முடிவு

    இந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போதே ஒன்றாக ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க இவர்கள் எல்லோரும் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்போதும் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இந்த கட்சிகள் திட்டமிட்டு இருக்கிறது.

    திமுக நிலை

    திமுக நிலை

    திமுகவின் நிலை இங்குதான் சிக்கலாகிறது. இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றால் திமுகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவர்களுடன் சேர்ந்து திமுகவும் ஆட்சி அமைக்க உதவும். ஆனால் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிடும்பட்சத்தில், அது திமுகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் இல்லாமல் திமுக வேறு ஒரு கூட்டணிக்கு போகும் நிலை ஏற்படும்.

    திட்டம் உள்ளது

    திட்டம் உள்ளது

    எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் காங்கிரஸ், பாஜக இரண்டையும் கழற்றிவிடும் எண்ணத்தில்தான் இருப்பதாக கூறுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மமதா உட்பட எல்லோரும் காங்கிரஸ் மீது மனக்கசப்பில்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க கூட வாய்ப்பு உள்ளது. அது இவர்கள் வெற்றி பெறக்கூடிய இடங்களை பொறுத்து மாறும்.

    திமுக என்ன செய்யும்

    திமுக என்ன செய்யும்

    திமுக இந்த மூன்றாவது அணியில் இணையுமா என்பதே தற்போது கேள்வி. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி , லோக்சபா தேர்தலுக்கு பின் மூன்றாவது அணியில் திமுக இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஸ்டாலின் என்ன செய்ய போகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவர் செயல்படுவாரா, முக்கியமாக ராகுலுக்கு எதிராக அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    திமுகவிற்கு ஏன் முக்கியம்

    திமுகவிற்கு ஏன் முக்கியம்

    ஸ்டாலின் பெரும்பாலும் காங்கிரஸ் உடன் தொடரவே விரும்புகிறார் என்கிறார்கள். திமுக கடந்த 5 வருடமாக மத்திய அமைச்சரவையில் இல்லை. அதேபோல் மாநிலத்திலும் 8 வருடங்களாக ஆட்சியில் இல்லை. இதனால் ஏதாவது ஒரு ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறுவது அக்கட்சிக்கு மிக முக்கியமான விஷயமாகும். இதை கருத்தில் கொண்ட, ஸ்டாலின் வாய்ப்புகளை தவற விடாமல் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    What will DMK chief M K Stalin do if opponents go for federal alliance option?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X