ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை.. இன்று தொடங்கும் முகாம்கள்.. பெண்கள் செய்ய வேண்டியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான முகாம்கள் இன்று தொடங்க உள்ளன. ஏற்கனவே இதற்காக விண்ணப்பங்கள், டோக்கன் வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்த திட்டத்திற்காக கடந்த வாரத்தில் இருந்து விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை இன்றில் இருந்து முகாம்களில் நீங்கள் கொடுக்கலாம். முதல் கட்ட முகாம் இன்று முதல் ஆகஸ்ட் 4 வரை நடக்கும். இரண்டாம் கட்ட முகாம் இன்று முதல் ஆகஸ்ட் 16 வரை நடக்கும்.

What women should do today as the Tamil Nadu 1000 RS Housewives Scheme starts?

இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தில் பல்வேறு அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. அதாவது பெயர், போன் எண், ஆதார் எண், படிப்பு, வருமானம் என்று பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இதனுடன் டோக்கன் ஒன்று வழங்கப்படுகிறது.

இந்த டோக்கன் மிக முக்கியம் ஆகும். அதில் உங்களிடம் கொடுப்படும் அப்ளிகேஷனில் நம்பர் இருக்கும். அதோடு சேர்ந்து ஒரு நம்பர் இருக்கும். இதுதான் டோக்கன் நம்பர் ஆகும். மேலும் டோக்கனில் உங்கள் பெயர் இருக்கும்.

பின்னர் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். இன்று முகாம் தொடங்குவதால் இன்றே முகாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் சென்றால் போதும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.

உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும். அதோடு தேவையான ஆவணங்கள், ஆதார் இணைக்கப்பட்ட போன், ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

முகாம்கள்: சென்னையில் முதல் கட்டமாக 650 ரேஷன் கடை முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முடியும். இரண்டாம் கட்ட முகாம் உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கும். இரண்டு கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்படும்.

What women should do today as the Tamil Nadu 1000 RS Housewives Scheme starts?

இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 3 -4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும். அதன்பின் இரண்டு, மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும்.

இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் கொண்ட மக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்படும். குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+