ஹைகோர்ட் ட்விஸ்ட்.. 'அதிகாரம்' உண்டு.. களமிறங்கும் போலீஸ்.. எடப்பாடிக்கு சிக்கல்? பரபர கொடநாடு கேஸ்
கொடநாடு வழக்கு விசாரணையில் எடப்பாடி என்ன செய்ய போகிறார்?
சென்னை: கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. போலீஸ் விசாரிக்க அதிகாரம் உள்ளதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது.. இதையடுத்து விசாரணையும் துரிதமாகும் பட்சத்தில், என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி சொல்லியே அனைத்தையும் செய்ததாகவும், சயான், மனோஜ் இருவரும் அளித்த வாக்குமூலம் இன்றைய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த வாக்குமூலங்கள் இன்று ஊட்டி கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டது.. இதனால், ஊட்டி நீதிமன்றம் காலையில் இருந்தே பரபரப்பாக காணப்பட்டது. எனினும் வழக்கின் விசாரணை, செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

போலீஸ்
அதேபோல, ரவி என்பவர் தொடுத்த கோடநாடு தொடர்பான வழக்கு, சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.. இந்த வழக்கில், போலீசுக்கு மறுவிசாரணை நடத்த அதிகாரம் உள்ளதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இந்த உத்தரவு அதிமுகவை மேலும் கதிகலங்க செய்துள்ளது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் கூடும் என்றே கணிக்கப்படுகிறது.

விவகாரம்
இதற்கு காரணம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.. தேர்தல் பிரச்சாரத்தில் தந்த வாக்குறுதியில் ஒன்றான இந்த கொடநாடு விவகாரத்தை திமுக கையில் செயல்படுத்தி வருவதால், பழிவாங்கும் நடவடிக்கை என்று பொத்தாம் பொதுவான காரணத்தை அதிமுகவால் இந்த விஷயத்தில் கூற முடியாது.. வாக்குறுதியில் சொன்னதை செய்கிறோம் என்ற ரீதியில்தான் திமுக இதனை அணுகி வருகிறது... அதனால் அதிமுகவால் இந்த விஷயத்தில் பெரிதாக குறை சொல்லவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மிஸ்டர் கிளீன்கள்
மற்றொரு பக்கம், "மிஸ்டர் கிளீன்கள்" என்று சொல்லப்படும் அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவருமே கண்டிப்பானர்கள்.. அனைவருமே நேர்மையானவர்கள்.. எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், முறையாக, வலுவான ஆதாரங்களை திரட்டி அதற்கு பிறகே, நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள்.. அப்படித்தான் கொடநாடு விவகாரத்திலும் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.. இது அதிமுகவுக்கு மேலும் சிக்கலை தந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியின் பெயர் இதில் அடிபடுகிறது.. அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.. பெயரை சேர்த்ததற்கே கடந்த வாரம் டென்ஷனின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்.. ஆவேசமாக பேட்டிகளை தந்தார்.. பதற்றத்துடன் காணப்பட்டார்.. அன்றைய தினமே அவசர அவசரமாக ஆளுநரை சென்று சந்தித்து பேசினார்.. 3 நாட்கள் பேரவையை புறக்கணித்தார்..

ஆலோசனை
தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. இது எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.. முக்கியமாக பாஜக மேலிடம், எடப்பாடிக்கு இந்த விஷயத்தில் உதவவில்லை என்றே சொல்கிறார்கள்..
அதனால் நாலாபக்கமும் சிக்கல் சூழ்ந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு விழிபிதுங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது.. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போலீஸ் விசாரணைக்கு தடை இல்லை என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது எடப்பாடிக்கும் அதிமுகவுக்கும் மேலும் சிக்கலை தருவதாக அமைந்துள்ளது..

மாஜிக்கள்
லிஸ்ட்டில் பெயர் உள்ளதால் நிச்சயம் எடப்பாடியிடமும் விசாரணை நீளுமா? என்று தெரியவில்லை.. அல்லது வேறு அதிமுகவினர் யாராவது இதில் சிக்குவார்களா? என்றும் தெரியவில்லை.. அல்லது சயான் அளித்த வாக்குமூலம் சிக்கலானதா? என்றும் தெரியவில்லை.. ஏனெனில், அதிமுக மாஜிக்கள் சிலரின் பெயரையும் சயான் குறிப்பிட்டுள்ளாராம்.

விசாரணை
இதில் இருந்து எடப்பாடி பழனிசாமி தன்னை குற்றமற்றவர் என்று எப்படி விடுவித்து கொள்ள போகிறார்? அதிமுக புள்ளிகள் நிரபராதிகள் என்பதை எப்படி நிரூபிக்க போகிறார்கள்? இந்த வழக்கு விசாரணைகளால் அதிமுகவின் செல்வாக்கு எந்த அளவுக்கு டேமேஜ் ஆகும்? அது வரப்போகும் தேர்தல்களில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications