வாட்ஸ்அப்பில் Reshare அறிமுகம்.. இனி ஒருவரின் ஸ்டேட்டஸை ஈஸியா காப்பி பண்ணலாம்.. புதிய அப்டேட்
சென்னை: நாம் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் வந்துள்ளது. இதில் ஸ்டேட்டஸ் தொடர்பாக புதிய வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் ஸ்டேட்டஸ் வைத்திருக்கும்போது அது நமக்கு பிடித்து இருந்தால் அதனை நாம் அவர்களிடம் கேட்டு பெற்று நமது ஸ்டேட்டஸாக வைப்போம். இனி அப்படி செய்ய வேண்டாம். ஒருவரின் ஸ்டேட்டஸ் பிடித்திருந்தால் அதனை நேரடியாகவே நமது ஸ்டேட்டஸாக வாட்ஸ்அப் மட்டுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளலாம். இதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டில் அதிகமானவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட்டுகள் வந்து கொண்டுள்ளன. இந்நிலையில் தான் ஆண்ட்ராய்டு செல்போன் வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

இந்த அப்டேட் வெர்ஷன் 2.25.27.18 என்று அழைக்கப்படுகிறது. இது வாட்ஸ்அப்பில் புதிய வசதிகளை தருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் சார்ந்த விஷயங்களில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய அப்டேட்
தற்போது குறிப்பிட்ட நபர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்க உள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் செல்போன் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதன் மூலமாக இந்த வசதியை பெறலாம்.
இதன்மூலம் ஒவ்வொருவரும் தங்களின் ஸ்டேட்டஸ் தொடர்பான விவரங்களை உடனடியாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். குறிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் UI Improvements. அதன்படி ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கான யூசர் இன்டர்பேஸ் மேம்படுத்தப்பட உள்ளது.
ஸ்டேட்டஸ் Reshare அறிமுகம்
அதாவது ஒருவர் தனது வாட்ஸ்அப்பில் ஒரு பாடலை ஸ்டேட்டஸாக வைக்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த பாடல் நமக்கும் பிடித்திருக்கிறது. அதனை நாமும் ஸ்டேடாஸாக வைக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்டவரிடம் அந்த பாடலை அனுப்பும்படி கேட்டு பெறுவோம். இல்லாவிட்டால் ஸ்டேட்டஸ் சேவர் போன்ற செயலிகள் மூலமாக அதனை சேமித்து நமது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து கொள்வோம்.
இனி அப்படி செய்ய வேண்டிய தேவை இல்லை. ஒருவரின் ஸ்டேட்டஸ் பிடித்திருந்தால் அதனை நேரடியாக நம் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம். இதற்காக Reshare ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ் பக்கத்தில் ஒருவரின் பதிவை ரீட்வீட் செய்வது போல் இந்த அம்சம் போல் செயல்படும்.
Reshare ஆன் செய்வது எப்படி?
இப்போது நாம் ஸ்டேட்டஸ் வைத்தால் அதன் அடிப்பகுதியில் Reply என்ற ஆப்ஷனுடன் நண்பர்கள் லைக் செய்ய வசதியாக ஹார்ட் சிம்பள் மட்டுமே இருக்கும். இந்த புதிய அப்டேட்டில் Reshare ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆன் செய்து வைப்பதன் மூலமாக நம் ஸ்டேட்டஸை இன்னொருவர் எளிதாக Reshare பண்ண முடியும்.
இதனை எப்படி பெறுவது என்று இங்கு பார்க்கலாம். இந்த ஆப்ஷனை மேனுவல்லாக தான் நாம் ஆன் செய்ய வேண்டும். அதாவது கேலரியில் இருந்து ஒரு போட்டோ அல்லது வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க கொண்டு செல்லும்போது அடிப்பகுதியில் status (contacts) என்று காட்டும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு தோன்றும் திரையில் Allow Sharing என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை ஆன் செய்தால் போதும். நமது ஸ்டேட்டஸின் அடிப்பகுதியில் ஹார்ட் சிம்பளுக்கு பக்கத்தில் 2 அம்புகுறிகளுடன் புதிய சிம்பள் தோன்றும். இதனை கிளிக் செய்வதன் மூலம் நம் ஸ்டேட்டஸை இன்னொருவர் எளிதாக Reshare செய்து பயன்படுத்த முடியும். இதுபொதுவாக ஆப்- என்று தான் இருக்கும். நாம் தான் ஆன் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்டேட்டஸ் வைக்கும்போதும் இதனை ஆப், ஆன் செய்து கொள்ளலாம்.
பேஸ்புக் - இன்ஸ்டாவிலும் ஈஸியா பகிரலாம்
மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நேரடியாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர முடியும். இப்போது ஸ்டேட்டஸை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதை பார்க்கும் ஆப்ஷன் உள்ளே சென்று மட்டுமே நமது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பகிர முடியும். இனி அப்படி செய்ய தேவையில்லை. நேரடியாகவே பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பகிர முடியும்.
அதாவது மேற்கூறியபடி Allow Sharing என்பதற்கு கீழ் நேரடியாக Facebook Story மற்றும் Instagram Story என்று இருக்கும். அதனை ஆன் செய்து வைப்பதன் மூலம் ஒருவர் தனது ஸ்டேட்டஸை நேரடியாக வாட்ஸ்அப்பில் அப்டேட் செய்யும்போதே அது அவர்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பகிரப்படும்.
இந்த ஆப்ஷனை பயன்படுத்த வாட்ஸ்அப் கணக்கை மெட்டாவுடன் இணைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் இது ஆப்ஷன் தான். அதுமட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் இந்த ஆப்ஷனை பயனர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல் 2வது அப்டேட் என்னவென்றால் இனி ஒருவரின் ஸ்டேட்டஸை பார்க்கும்போது உடனடியாக வெளியே வர வேண்டும் என்றால் ஸ்கிரீனை கீழ் நோக்கி ஸ்வைப் செய்தால் போதும். உடனடியாக வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications