WhatsApp: காசு கட்டினால் ஏராளமான வசதிகள்.. புது அப்டேட்டுடன் வாட்ஸ்அப் பிளஸ்.. மெட்டா நிறுவனம் முடிவு
சென்னை: வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்காக புதிய பிளஸ் பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் கூடுதல் தனியுரிமை வசதிகள், விளம்பரமில்லா பயன்பாடு, புதிய கஸ்டமைசேஷன் அம்சங்கள் உள்ளிட்ட பல சிறப்பு சேவைகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
வாட்ஸ் அப் செயலி, தற்போது ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத ஒரு ஆப் ஆக உள்ளது. உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்களும் இந்தியாவில் மட்டும் 85 கோடி பயனர்களும் வாட்ஸ் அப்பில் கணக்கு வைத்துள்ளனர்.

வாட்ஸ்அப் செயலி
குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக அறிமுகம் ஆன வாட்ஸ் அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு அசுர வளர்ச்சி கண்டது. புகைப்படங்கள், பிடிஎப் பைல்கள் என கோப்புகளையும் வாட்ஸ் அப் வழியாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அடுத்த நொடியே அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் மெசேஜ்கள் மட்டும் இன்றி கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேடஸ் வைக்கும் வசதி என பல வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போது வாட்ஸ் அப் செயலில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய புதிய வாட்ஸ் அப் பிளஸ் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கமாக நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை விட பல மடங்கு கூடுதல் வசதிகள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
கட்டணத்துடன் வாட்ஸ் அப் பிளஸ்
கட்டண அடிப்படையிலான இந்த மேம்பட்ட பதிப்பு, கூடுதல் அம்சங்களை வழங்கும் என 'வாபீடாஇன்ஃபோ' தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பிளஸ் சேவை மூலம், பயனர்கள் தங்கள் புரொஃபைலை தாங்களாக்வே கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். செயலியின் தோற்றம் (தீம்), முக்கிய வண்ணங்கள் மற்றும் செயலி ஐகான் மாற்றும் வசதிகள் இடம்பெறுமாம்.
பிரீமியம் சந்தாதாரர்களுக்கு, பின் செய்யப்பட்ட சாட்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 20 ஆக உயரும். அத்துடன், நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்குத் தனித்தனி ரிங்டோன்களை அமைக்கும் வசதியும் கொடுக்கப்படும்.
பிரீமியம் வாட்ஸ்அப்பில் உள்ள வசதிகள்
கால் செய்து இருப்பது யார் என்று செல்போனை எடுக்காமலே கண்டறிய முடியும் வகையில், இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது. ஸ்பெஷல் ஸ்டிக்கர்கள், அதிகப்படியான உரையாடல் ரியாக்ஷன்ஸ் ஆகியவையும் இந்த பிரியம் வாட்ஸ் அப்பில் இருக்கும் என்று வா ஃபீட்டா தெரிவித்துள்ளது.
தற்போது இந்த புதிய வாட்ஸ் ப் பிளஸ் அறிமுகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வாட்ஸ் அப்பில் கட்டணம் செலுத்தி பார்க்கும் பயனர்களுக்கு ஏற்ற வகையில், இந்த அம்சங்கள் இல்லை என்றும் டெக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பயனர்களின் கருத்து என்ன?
எனினும், இது பயன்பாட்டுக்கு வந்த பிறகே இதில் உள்ள முழு அம்சங்களும் தெரியவரும் என்பதால், பயனர்கள் இதை பணம் செலுத்தி பயன்படுத்துவது மதிப்புள்ளதா என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். மெட்டா தனது செயலிகளில் இருந்து வருவாய் ஈட்டும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
அதன் ஒருபடியாகவே இந்த முயற்சியை மேற்கொள்ளலாம் என்று தெரிகிறது. வாட்ஸ் அப் தற்போது பயனர்களுக்கு இலவசமாகே வழங்கப்படுகிறது. எனினும், விளம்பரங்கள் வாயிலாக மெட்டா நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது. தற்போது ஏஐ ஆதிக்கம் அதிகரித்து வருவதால், வருவாய் ஈட்டும் செயல்களை மெட்டா அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வருவாய் ஈட்டவே இந்த புதிய பிளான்?
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் மெட்டா புதிய அம்சங்களை விரைவில் கொண்டு வர இருக்கிறதாம்.. உதாரணமாக, நீங்கள் பாலோ செய்தும் உங்களை பாலோ அதாவது, திரும்பிப் பின்தொடராதவர்கள் யார் என்பதைக் காட்டும் வசதி, அல்லது ஒருவரின் ஸ்டோரியை அவர்களுக்குத் தெரியாமல் பார்க்கும் வாய்ப்பு போன்றவை கொண்டு வருவதை பற்றி மெட்டா நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
வாட்ஸ் அப் செயலியை 2014 ஆம் ஆண்டு பல பில்லியன் செலவு செய்து மெட்டா நிறுவனம் வாங்கியது. இப்போது அவற்றை பணமாக்கி முதலீடுகளுக்கு வருவாய் ஈட்ட இது சரியான நேரம் என மர்க் சூகர்பெர்க் திட்டமிட்டுள்ளாராம்.. அதனாலேயே இந்த பிரீமியம் பிளான் என்கிறார்கள் நெட்டிசன்கள்..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications