பயனர்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்த வசதி.. வாட்ஸ் அப் கொடுத்த புது அப்டேட்! ஸ்டேட்டசில் வருது மாற்றம்
சென்னை: வாட்ஸ் அப் தனது பயனர்களை தக்க வைக்க அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை செய்து வருகிறது. தற்போது பணம் அனுப்பும் வசதி கூட வாட்ஸ்-அப்பில் வந்துவிட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அப்டேட் ஒன்றை செய்துள்ளது. இதன்படி இனி வாட்ஸ் - அப்பில் நாம் வைக்கும் ஸ்டேட்டஸ்களை நமக்கு நெருக்கமானவர்களுக்கு உடனே நோட்டிபிகேஷன் மாதிரி காண்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறது. ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக உள்ள வாட்ஸ்அப், துவக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியாக அறிமுகமானது. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் இந்த செயலியை வாங்கியது. மெட்டா கைக்கு போன பிறகு வாட்ஸ்அப்பில் புது புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள்
வாட்ஸ்அப்பில் வெறும் மெசேஜ் மட்டும் இன்றி இமேஜ்கள், வீடியோக்களை அனுப்பும் வசதி, ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி, ஆடியோ, வீடியோ கால் பேசும் வசதி, பணம் அனுப்பும் வசதி என புது புது அப்டேட்களை விட்டு பயனர்களை கவர்ந்து வருகிறது. சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும் பயனர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கவும் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
வாட்ஸ்அப்பை பொறுத்தவரை உலகம் முழுவதும் 3 பில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்பை 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மோனோபோலி போல ஆதிக்கம் செலுத்தி வந்த வாட்ஸ்அப்பிற்கு தற்போதுதான் அரட்டை போன்ற செயலிகள் சவால் அளித்து வருகின்றன.
ஸ்டேட்டஸ் போடுவதில் மாற்றம்
சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம். வாட்ஸ்அப்பில் விரைவில் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு சூப்பர் அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வாட்ஸ்அப்பில் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ, ஆடியோக்களையோ தற்போது ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். இப்படி ஸ்டேட்டஸ் ஆக வைத்தால் நமது எண்கள் யாரிடம் எல்லாம் உள்ளதோ அவர்களுக்கு ஸ்டேட்டஸ் காட்டும்.
இந்த ஸ்டேட்டஸ் அம்சத்தில் தான் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் டெஸ்டிங் செய்து வருகிறதாம். இதன்படி, நமக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் ஸ்டேட்டஸ் வைத்தால் நோட்டிபிகேஷன் வரும் விதமாக செட்டிங்ஸில் ஆன் செய்து வைத்தால் அவர்கள் ஸ்டேட்டஸ் வைத்தால் உடனே நோட்டிபிகேஷன் வந்துவிடும்.
நெட்டிசன்கள் கருத்து
நெருக்கமானவர்களின் ஸ்டேட்டஸ்களை தவற விடாமல் பார்ப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆப்ஷன் இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வசதி படிப்படியாக அமலுக்கு வர உள்ளதாக வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்களை கண்காணிக்கும் WABetaInfo தெரிவித்துள்ளது.
இந்த வசதியை செயல்படுத்த பயனர்கள், கான்டாக்ட் ஸ்டேட்டஸ் மெனுவை ஓபன் செய்து அதில் நோட்டிபிகேஷன் அம்சத்தை செலெக்ட் செய்ய வேண்டியிருக்கும் என தெரிகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் நெட்டிசன்கள், வாட்ஸ்அப் கொண்டு வருவதிலேயே சிறந்த அப்டேட்களில் ஒன்றாக இதை கருதுவேன் என தெரிவித்துள்ளனர்.
மிஸ் பண்ணாமல் பார்க்க முடியும்
ஒரு நெட்டிசன் கூறுகையில், "எனக்கு நூற்றுக்கணக்கான ஸ்டேட்டஸ்கள் காட்டுகின்றன. நான் யாருடைய ஸ்டேட்டஸை பார்க்க நினைக்கிறேனோ, அவர்களின் ஸ்டேட்டஸ்களை சில நேரம் இதனால் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால் தற்போது கொண்டு வரப்படும் இந்த புதிய அப்டேட்டால், நாம் யாருடைய ஸ்டேட்டஸை மிஸ் பண்ணக்கூடாது என நினைப்போமோ அவர்களின் ஸ்டேட்டஸ் சரியாக நோட்டிபிகேஷனாக வந்துவிடும்" என்று தெரிவித்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications