இன்டெர்நெட்டே தேவையில்லை.. வாட்ஸ் அப்பில் வீடியோ, போட்டோக்களை அனுப்பலாம்.. வரப்போகும் அசத்தல் வசதி
சென்னை: இண்டெர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ, பைல்களை அனுப்பும் வசதி விரைவில் வர இருக்கிறது என்று வாட்ஸ்அப்பின் WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது இந்த வசதியை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்தால் வாட்ஸ் யூசர்கள், ஹெச்டி வீடியோக்கள், புகைப்படங்கள், பிடிஎப் ஆவணங்கள் உள்ளிட்ட கோப்புகளை கியூஆர் கோடு ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம்.
உலகம் முழுவதும் பல கோடி பயனர்களுடன் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வாட்ஸ் அப் டெக் உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் அறிமுகம் செய்யப்பட்ட போது வெறும் குறுஞ்செய்தி அனுப்பும் தளமாகவே இருந்தது.

இண்டெர்நெட் இல்லாமல்: நாளைடைவில் பயனர்களை கவரும் விதமாகவும் சந்தையில் போட்டியை சமாளிக்கவும் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் வெளியிட்டு வருகிறது. வாட்ஸ் அப் கால் வசதி, வீடியோ கால் வசதி, இமேஜ்கள், பிடிஎப் போன்ற ஃபைல்களை அனுப்பும் வசதி என வாட்ஸ் அப் பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் கூட வாட்ஸ் அப்பின் செயற்கை நுண்ணறிவான ஏஐ வசதியை வழங்கி பயனர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்தது.
அந்த வகையில் விரைவில் சூப்பர் அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இண்டெர்நெட் இல்லாமல் கோப்புகளை பகிரும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்படும் இருக்கும் அப்டேட்கள் குறித்த தகவலை முன்கூட்டியே கசிய விடும் WABetaInfo - இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
முதலில் ஆண்ட்ராய்டு போன்களில்: இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டால் போனில் இண்டெர்நெட் வசதியை ஆன் செய்யாமல் டாக்குமெண்ட்கள், போட்டோக்கள், வீடியோக்கள் உள்பட அனைத்து விதமான ஆவணங்களையும் ஷேர் செய்து கொள்ள முடியும். முதலில் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த வசதி கொண்டு வரப்படும் என்றும் அதன்பிறகு இந்த வசதி ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த வசதியை வாட்ஸ் அப் சோதித்து வருகிறதாம்..
ஆப்பிள் ஏர்டிராப்: இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்தால் வாட்ஸ் யூசர்கள், தங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள ஹெச்.டி வீடியோக்கள், புகைப்படங்கள், பிடிஎப் ஆவணங்கள் உள்ளிட்ட கோப்புகளை கியூஆர் கோடு ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம். இதற்கு இண்டெர்நெட் வசதி தேவையில்லை. போனில் இன்பில்ட் ஆக இருக்கும் நியர்பைஷேர் ஆப்சன் வழியாக இந்த வசதி செயல்படும். அதாவது ஆப்பிள் ஏர்டிராப் எப்படி செயல்படுகிறதோ அதேபோன்ற தொழில் நுட்படத்துடன் இந்த வசதி செயல்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
விரைவில் வருகிறது: விரைவில் இந்த வசதி அமலுக்கு வரலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே, மொபைல் கட்டணம் உயர்வால், இண்டெர்நெட் பயன்பாடுக்கு அதிக அளவு கட்டணம் செலுத்தும் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில், வாட்ஸ் அப் கொண்டு வர இருக்கும் புதிய வசதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக ஜிபி கொண்ட பைல்களை ஷேர் செய்யும் பயனர்களுக்கு இந்த வசதி பெரும் பயனளிக்கும். ஏனெனில், வாட்ஸ் அப்பில் இத்தகைய பைல்களை அனுப்பும் போது அதிக அளவில் டேடா வீணாகும். இதனால், ஆப்லைனில் அனுப்பும் போது அந்த கவலை பயனர்களுக்கு இல்லை. அதேபோல, நெட்வொர்க் மோசமாக இருந்தாலும் நெட்வொர்க் வசதியே இல்லாத இடத்திலும் வாட்ஸ் அப்பில் இருந்து பைல்களை அனுப்பிக் கொள்ள முடியும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications