கோதுமை மாவு பாக்கெட் ரூ.15-க்கு கிடைக்குமா? தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் ரூ.15-க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு கோதுமை மாவு கிடைக்கும் தெரியுமா?

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி கார்டுதாரர்களுக்கு கோதுமை மாவு பாக்கெட்டுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா 2 கிலோ கோதுமை மாவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Wheat Flour Scheme Tamil Nadu Government Ration Shop News

தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை மாவு

இப்போது தமிழகத்தில் அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அளவு அரிசிக்குப் பதிலாக கோதுமையையும் வாங்கிக் கொள்ளலாம்.

சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் அதிகபட்சம் 10 கிலோ கோதுமையும், மற்ற பகுதிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு மாதந்தோறும் தமிழகத்துக்கு 30 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்கிறது.

கிலோ ரூ.50 முதல் ரூ.60

தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் கோதுமை மாவை வாங்குவதில் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும், பலர் இரவு உணவில் அரிசி சாதத்துக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிட விரும்புகிறார்கள்..

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ரேஷன் கடைகளிலேயே கோதுமை மாவு பாக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எப்படி வழங்கப்படும்?

இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து கோதுமை பெறப்பட உள்ளது. அந்தக் கோதுமையை தனியார் மாவு ஆலைகளில் அரைத்து, பாக்கெட்டுகளில் அடைத்து வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கோதுமை மாவு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.15 விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கோதுமை மாவு, ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளதால், இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கோதுமை வாங்கும் வசதி உள்ள நிலையில், இனி கோதுமை மாவையும் பாக்கெட்டுகளில் வாங்கும் வாய்ப்பு ஏற்பட உள்ளது. இதன் மூலம் சப்பாத்தி தயாரிக்க கோதுமையை வாங்கி அரைக்க வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக மாவையே வாங்கிக் கொள்ளலாம். இருந்தாலும் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+