மனோஜ் பாரதிராஜா மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.. இறுதி சடங்கு எப்போது & எங்கே நடைபெறும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். 48 வயதே ஆன மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது மனோஜ் பாரதிராஜாவின் உடல் பாரதிராஜா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிச் சடங்கு நடக்கும் இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தந்தை பாரதிராஜா இயக்கத்திலேயே மனோஜ் பாரதிராஜா அறிமுகமானார். 1999ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் அப்படம் வெளியானது.

When and Where Manoj Bharathiraja son of Bharathiraja funeral will take place

மனோஜ் பாரதிராஜா

அந்தப் படம் பெரியளவில் மக்களிடையே வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, பல்லவன், சாதுரியன் உள்ளிட்ட சில படங்களில் மனோஜ் நடித்திருந்தார். இருப்பினும், அதற்குப் பெரியளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில், மனோஜ் பாரதிராஜா நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு இயக்குநர்கள் மணிரத்தினம், ஷங்கரிடம் உதவி இயக்குநராகவும் இருந்தார்.

இதற்கிடையே கடந்த சில காலமாகவே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதய சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மனோஜ், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

மனோஜ் பாரதிராஜா மறைவு

இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காலமானார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினரையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து அவரது உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அவரது தந்தையும் இயக்குநருமான பாரதிராஜா அங்குச் சென்றார். தொடர்ந்து பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் மனோஜிற்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் நேற்றிரவு சென்னை நீலாங்கரை கேசரினா டிரைவில் உள்ள இயக்குநர் பாரதிராஜா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மனோஜ் பாரதிராஜா இறுதிச் சடங்கு எங்கே

இந்தச் சூழலில் மனோஜ் பாரதிராஜாவுக்கு எங்கே எப்போது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இப்போது நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு மனோஜ் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு திரைத்துறையினர் & பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4:30 மணி அளவில் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது..

முன்னதாக மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு வயது வெறும் 48 ஆகும். சாதுரியன் படத்தில் உடன் நடித்த நந்தனா என்ற பெண்ணை மனோஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+