சரியாக 3 மணிக்கு தயாராக இருங்க.. பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதோ முழு விபரம் பாருங்க
சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றினை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 4ம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.. கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்கள்.. இதன் முடிவுகள், மே 14ம் தேதி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளை மே 31 முதல் ஜூன் 4க்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு பாடத்திற்கும் மறுமதிப்பீடுக்கு ரூ.505 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், மறுகூட்டல்-II க்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 எனவும், மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு இதுதான்:
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு வரும் 31ம் தேதி மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவம்: www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 31 (வெள்ளிகிழமை) காலை 11 மணி முதல் ஜூன் 4 (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரம்:
மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505
மறுகூட்டல்-II
உயிரியல்-ரூ.305
மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205
என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications