கடன் வேணுமா? கிரெட் கார்டு யூஸ் பண்றீங்களா? அப்ப இந்த 2 விஷயத்திலும் கவனமா இருங்க.. ரொம்ப முக்கியம்
சென்னை: கிரெடிட் கார்டுகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தாமலேயே இருந்தால் என்னாகும்?
கிரெடிட் கார்டுகளும் ஒரு வகையான கடன்களதான்.. செலவழித்த தொகையை நீங்கள் பின்னாளில் கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.. சலுகை காலத்திற்குள் திருப்பி செலுத்தினால், அந்த தொகைக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
கிரெடிட் கார்டுகளை எப்போதுமே நாம் பாதுகாப்பாகவும், கவனமாகவும் வைத்திருக்க வேண்டும்... இந்த கார்டுகளின் பின்புறம் CVV (Card Verification Value) என்ற நம்பர் இருக்கும். இந்த நம்பர் சீக்ரெட் நம்பராகும்.. இதை யாரிடமும் சொல்லக்கூடாது. கிரெடிட் கார்டுகளுக்கான மாத பில்லை பாதுகாத்து சேகரித்து வைப்பது நல்லது..

கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டை பயன்படுத்தியதற்கு தரப்படும் பில்லில் கையெழுத்திடும்முன்பு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை சரி பார்க்க வேண்டும்.. அதில் காலியிடங்கள் இருந்தால் அடித்துவிட வேண்டும்.. இல்லாவிட்டால் கடைக்காரர்கள் ஏதாவது ஒரு தொகையை எழுதிவிட்டு வங்கிக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. ஒரு கார்டு மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.. 3, 4 கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளக்கூடாது..
உங்கள் கார்டு திருடு போய்விட்டால், உடனே வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் உடனே அந்த கார்டின் மூலம் பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய முடியாமல் தடுத்துநிறுத்த முடியும்.
செயல்பாடுகள்: கிரெடிட் கார்டுகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி, செயல்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.. பயன்படுத்தாமலேயே கார்டை வைத்திருந்தால், நிறுவனம் அந்த கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடிவிடும்.. எத்தனை நாட்களுக்கு செயல்படாத கார்டுகளை வைத்திருந்தால் அக்கவுண்ட் மூடப்படும் என்பது குறிப்பிட்ட நிதி நிறுவனத்தை பொறுத்தே அமையும்..
அதேபோல, உங்களது கார்டை மூடுவதற்கு முன்பு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டுமா? வேண்டாமா என்பதையும் நிறுவனமே முடிவு செய்யும்.. ஆனால், கிரெடிட் கார்டு மூடப்படும்போது, வாடிக்கையாளரின் கிரெடிட் லிமிட் 30 சதவீதத்திற்கு குறைக்கப்படுகிறது. ஒருவேளை, அவசரத்துக்கு நீங்கள் வங்கியில் கடன் வாங்க நேரிட்டால், அப்போது இது பாதிப்பை தரலாம்.. எனவே, கிரெடிட் கார்டை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது.. ஒரேடியாக பயன்படுத்தாமலும் இருக்கக்கூடாது..
எப்போது மூடலாம்: ஒருவேளை உங்களிடம் வேறு நிறைய கிரெடிட் கார்டுகள் இருக்கிறது என்றாலோ அல்லது இந்த கார்டை வைத்திருப்பதால் உங்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என்ற சூழல் வந்தாலோ, உங்கள் கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை நீங்கள் தாராளமாக மூடிவிடலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications