Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி பப்புன்னு சொன்னப்ப..ராகுல் வெயிட்டேஜை கூட்டிய ஸ்டாலின்! துரோகம் செஞ்சிட்டீங்க! திமுக கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியலின் திசையைத் தீர்மானித்த ஒரு புள்ளி, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானம். ஒட்டுமொத்த தேசமும் 'பப்பு' என்று ராகுல் காந்தியை எள்ளி நகையாடியபோது, "வருக... பிரதமர் வேட்பாளரே" என முதல் குரல் கொடுத்து, தேசிய அரசியலில் ராகுலுக்கு 'வெயிட்டேஜ்' கூட்டியவர் மு.க.ஸ்டாலின். 'இந்தியா' கூட்டணியின் அச்சாணியாக நின்று, கருத்தியல் ரீதியாக காங்கிரஸைத் தாங்கிப் பிடித்த தி.மு.க-வுக்கு, இன்று டெல்லி கொடுக்கும் பரிசு என்னவோ 'ஏமாற்றம்' தான்!

tamil nadu assembly elections 2026 congress

தொகுதிப் பங்கீட்டில் 'திருகுதாளம்': கறார் காட்டும் காங்கிரஸ்

தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்க வேண்டிய நிலையில், காங்கிரஸ் காட்டும் பிடிவாதம் அறிவாலயத்தை அதிருப்தியின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது. வெறும் லோக்சபா தொகுதிகள் மட்டுமல்லாமல், சட்டமன்ற இடைத்தேர்தல் இடங்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என 'காம்போ' டீல் ஒன்றைத் தட்டிப் பறிக்க காங்கிரஸ் மல்லுக்கட்டுகிறது.

ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கு வரும் மார்ச் 5-ம் தேதி (வியாழக்கிழமை) கடைசி நாள். ஆனால், காங்கிரஸ் இன்னும் இழுபறி நீடிப்பது தி.மு.க-வை எரிச்சலடையச் செய்துள்ளது. "வேட்புமனு தயார் செய்ய வேண்டும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்... காலக்கெடு தலைக்கு மேல் நிற்கும்போது, இன்னும் எத்தனை நாட்கள் தான் காத்திருப்பது?" என்பதே தி.மு.க தரப்பின் குமுறலாக இருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்தில் தெரிந்த 'கோபம்'

அரசியல் ரீதியான மோதல்களைத் தாண்டி, தனிப்பட்ட உறவிலும் ஒரு விரிசல் விழுந்திருப்பதை தி.மு.க தலைவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவிக்க, ராகுல் காந்தியோ கடமைக்கு ஒரு 'லேசான' மெசேஜோடு முடித்துக்கொண்டார். ஒன்பது ஆண்டுகளாக பாறை போல காங்கிரஸுக்குப் பின்னால் நின்ற ஒரு தோழமைக் கட்சித் தலைவருக்கு காங்கிரஸ் கொடுக்கும் மரியாதை இதுதானா?

"எங்கள் கட்சியின் ராஜ்யசபா சீட்டை காங்கிரஸுக்காக விட்டுக் கொடுக்கிறோம். ஆனால், அதற்கான ஒரு சிறு அங்கீகாரமோ, நன்றியுணர்வோ டெல்லியிடம் இல்லை" எனப் புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

ஒரு 'உதிரி'யால் உடையுமா கூட்டணி?

வாக்காளர்களிடம் துளிகூட செல்வாக்கு இல்லாத, அரசியலில் இன்னும் 'அன்-டெஸ்டட்' பிளேயராக இருக்கும் ஒரு நபரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, கைதேர்ந்த - சோதனைகளைத் தாங்கி நின்ற தி.மு.க-வை காங்கிரஸ் உதாசீனப்படுத்துவது பெரும் விபரீதத்தில் முடியலாம் என்று குமுறுகிறார்கள் உடன் பிறப்புகள்.

ராகுல் காந்தியும் காங்கிரஸும் சில சீட்டுகளுக்காக ஸ்டாலினைத் தூக்கி எறிய நினைத்தால், அது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா கூட்டணி உடையும். இந்தியா கூட்டணியில் மற்ற கட்சிகள் வெளியேறும் . ஏனென்றால் அரவிந்த் கெஜ்ரிவால், மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் என்று யாருமே ராகுலை ஸ்டாலின் அளவிற்கு நட்பாக பார்க்கவில்லை. ஸ்டாலின் போய்விட்டால் மற்றவர்களும் போய்விடுவார்கள்.

அப்படி நடந்தால், ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவராக உருவெடுக்கும் கனவு கலைந்து, அவர் வெறும் ஒரு எம்பியாக மட்டுமே காலம் கழிக்க வேண்டிய சூழல் உருவாகும். கடைசி வரை எம்பியாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியா கூட்டணியின் ஆணிவேரையே காங்கிரஸ் அறுக்கப் போகிறதா அல்லது விட்டுக்கொடுத்து விஸ்வரூபம் எடுக்கப் போகிறதா? பதில் சொல்ல வேண்டியது ராகுல் தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+