ரபேல் வாட்ச்சுக்கு "லஞ்சம்"! இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா? அண்ணாமலைக்கு திமுக வைத்த செக்! பறந்த கேள்வி
சென்னை: அண்ணாமலை வெளியிட்ட ரபேல் அப்போ அந்த பில்லுலையும் அண்ணாமலை பெயர் இல்லையா?? லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா!! என்று திமுக ஐடி விங் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹாட் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 ரூபாய் கொண்டது.

இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். இதை அண்ணாமலை வாங்கிய பில்லை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுகவினர் அண்ணாமலைக்கு பிரஷர் போட்டு வருகின்றனர்.
நேற்று இந்த பில் விவகாரங்கள் திமுக ஐடி விங் நிர்வாகிகள் மூலம் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அண்ணாமலை வேறு ஒரு பில்லை வெளியிட்டார். கோயம்புத்தூரை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து அவர் வாட்சை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான பில்லை அண்ணாமலை இன்று காட்டினார். இதையடுத்து திமுக ஐடி விங் சார்பாக அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அவரின் பெயரை குறிப்பிடாமல் செய்யப்பட்டு உள்ள போஸ்டில்
நேத்து வந்த பில்லுக்கு ஆடு இன்னும் வாய தொறக்கலியே!! #meh பிரண்ட்ஸ் உங்க கிட்ட இருக்க பில்லையும் அதோட விவரங்களையும் ரிப்ளைல போடுங்க.. மத்தவங்களும் தெரிஞ்சிக்கட்டும்
அப்போ அந்த பில்லுலையும் ஆடு பேரு இல்லையா?? லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா!!
#அரசியல்கோமாளி_அண்ணாமலை, என்று திமுக ஐடி விங் போஸ்ட் செய்துள்ளது.
முன்னதாக திமுக சார்பாக அண்ணாமலையிடம் எழுப்பப்பட்ட கேள்வியில்,
உலகில் 500 வாட்சுகள் மட்டுமே இருக்கும் ரேர் கலெக்சனை எந்த பச்சை துண்டு போட்ட விவசாயி பத்து லட்சத்துக்கு வாங்குவார்? அப்போ நீங்க டுபாக்கூர் விவசாயியா?

ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா? மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?
ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காவே தயாரிக்கப்படும் 'சங்கி' விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?
நான் தேசியவாதி அதனால ரபேல் வாட்ச் கட்டியிருக்கேன் சொல்ற நீங்க, உண்மையான தேசியவாதின்னா பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்தின் வாட்சை கட்டாமல், இந்திய நிறுவனமான Hindustan Aeronautics Ltd நிறுவன வாட்சைத் தானே கட்டியிருக்கணும்? அப்போ நீங்க தேச துரோகியா?
அட குறைந்தபட்ச தேசியவாதியா தமிழ்நாடு அரசு முதலீடு (TIDCO) செய்திருக்கும் TITAN வாட்சையாவது வாங்கிருக்கலாம் இல்லன்னா HMT வாட்சாவது வாங்கி தங்கள் தேசப்பற்றை காட்டியிருக்கலாமே! பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation வாட்ச்ல தான் உங்க தேசப்பற்ற காட்டுவீங்களா 🐐?
ரபேல் வந்ததுக்கு பிறகு இந்திய ராணுவத்தின் Rules of War மாறியிருக்குன்னு சொல்றிங்களே, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா காலனி அமைப்பதும் அருணாச்சல் பிரதேஷ் பார்டரில் இந்திய இராணுவம் குச்சிகளைக் கொண்டு சண்டையிடுவதும் தான் மாறிப்போன Rules of War-ஆ?
500 லிமிட்டட் எடிசன் வாட்ச்களில் 149வது வாட்சை கட்டியிருப்பதாக பீற்றிக்கொள்பவரே. ரபேல் ஊழலை மறைக்க இந்த ரேர் கலெக்சன் உங்களுக்கு வழங்கப்பட்டதா?
5000 கோடி ரூபாயினை அமெரிக்காவுக்கு கொண்டு போன போது கண்டுகொள்ளாதவர்கள் இதையும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்தீர்களா?
இல்லை அந்த 5000 கோடி ரூபாயில் வாங்கியது தானா இந்த பத்து லட்சம் ரூபாய். "ரெண்டு ஆடு வச்சிருக்கேன், நான் ஒரு விவசாயி" என பொது வெளியில் கபட நாடகம் 'ஆடு'ம் ஒருவருக்கு பத்து லட்சத்துல வாட்சு எப்படி வந்தது என்பதே கேள்வி, என்று அண்ணாமலையிடம் திமுக சார்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச்












Click it and Unblock the Notifications