அதிமுக பொதுக்குழு எப்போது..? தேதி குறிக்கத் தயாராகும் அதிமுக தலைமை...!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், விரைவில் பொதுக்குழுவை கூட்டும் திட்டத்தில் உள்ளார்களாம்.
பொதுக்குழு என்பது அரசியல் கட்சியினரை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவை போன்றது. திமுக பொதுக்குழுவை கூட்டினால் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்தளவுக்கு உள் அரங்கில் காரசார விவாதம் நடைபெறும். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக பொதுக்குழு என்பது பெயருக்கு மட்டும் நடைபெறும். யாரும் எந்த நிர்வாகியும் மூச்சு கூட விடமாட்டார்கள்.

ஆனல் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திமுக கூட்டங்களை காட்டிலும் அதிமுக கூட்டங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடக்கின்றன. நிர்வாகிகள் தங்கள் உள்ளக்குமுறலை கொட்டுகின்றனர். அண்மையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஒற்றைத்தலைமை கோரிக்கையை முன்வைத்ததே அதற்கு சாட்சி.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்க முடிவெடுத்துள்ளார்களாம் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும். வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் தமிழகம் திரும்பியதும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே பொதுக்குழுவை நடத்தி முடித்துவிடலாம் என எண்ணுகிறாராம் இ.பி.எஸ்.
வழக்கமாகன் டிசம்பர் மாதமோ, ஜனவரி மாதமோ தான் அதிமுக பொதுக்குழு நடைபெறும், இந்த முறை அக்டோபரிலேயே பொதுக்குழுவை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது அதிமுக தலைமை. சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார், ஜனவரியில் விடுதலை செய்ய வாய்ப்பு என ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் எதற்கு பிரச்சனை அடுத்தமாதமே வைத்துவிட்டால் சலசலப்புகளுக்கு வாய்ப்பிருக்காது என நினைக்கின்றனர் அதிமுக சீனியர் நிர்வாகிகள்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications