மாணவர்களுக்கு அப்டேட்: நீட் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ்? வெளியான முக்கிய தகவல்!
சென்னை : நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டதால் அங்கு நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டதன் காரணமாக ரிசல்ட் தாமதமாகிறது. எப்போது வெளியாகும்?
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு அப்போது நீட் தேர்வு நடைபெறவில்லை. மணிப்பூரில் நீட் தேர்வு ஜூன் 6 ஆம் தேதியான இன்று நடைபெற்றுள்ளது. மணிப்பூரில் சுமார் 8,700 மாணவர்கள் இன்று நீட் தேர்வு எழுதினர். கலவரம் காரணமாக மணிப்பூர் மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய தேர்வு முகமை நாட்டின் பிற பகுதிகளில் தேர்வு எழுதியவர்களுக்கான நீட் விடைக்குறிப்பை ஜூன் 4 அன்று வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான கடைசி தேதி ஜூன் 6 என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரிலும் நீட் தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளதால், விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு ஜூன் 15ஆம் தேதி, நாடு முழுவதும் ஒரே கட்டமாக முடிவுகள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
நீட் 2023 முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை, நாடாளுமன்றக் குழுவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications