ஆரம்பித்த ஆளுநர்.. பதவியேற்பில் ஆசையா இருந்தாரே பொன்முடி.. லெட்டர் எழுதினாரே ஸ்டாலின்.. அதிருது திமுக
சென்னை: இன்றைய தினம் பொன்முடி எப்படியாவது பதவியேற்று கொண்டுவிடுவார் என்று திமுகவினர் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்தனர்.. ஆனால், திடீரென ஆளுநர் டெல்லி கிளம்பி சென்றுவிட்டதால், திமுகவின் மொத்த கனவும் தகர்ந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை ஹைகோர்ட் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது... அத்துடன், விசாலாட்சிக்கு ஜாமீனையும் வழங்கி உத்தரவிட்டது.

இதனால், மறுபடியும் எம்எல்ஏ பதவியை பெற்றுள்ளார் பொன்முடி... மறுபடியும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார்.. மறுபடியும் அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவிக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார்.
பதவிப்பிரமாணம்: அதாவது, இன்றைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து சுப்ரீம் கோர்ட்டின் நகலையும் தன்னுடைய கடிதத்துடன் இணைத்து பரிந்துரை செய்திருந்தார் ஸ்டாலின். எனவே, பொன்முடிக்கு ராஜ்பவனில் இன்று பதவிப்பிரமாணத்தை ஆளுநர் நடத்தி வைப்பார் என்றும், பதவி பிரமாணத்திற்கு இன்றைய தினம் ஆளுநர் நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடுதிப்பென்று ஆளுநர் ரவி இன்று டெல்லி கிளம்பி சென்றுள்ளார்.. நாளை மறுதினம் அதாவது 16ம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். எனவே, இன்றைய தினம் பொன்முடி அமைச்சராக மறுபடியும் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது... இதையடுத்து, பொன்முடியின் பதவிப்பிரமாணம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பதவியேற்பு: இன்றைய தினம் எப்படியும் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படும் என்பதால், பதவியேற்புக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை நேற்று மாலை முதலே செய்ய துவங்கிவிட்டதாம். ஆனால், நேற்றிரவு ஆளுநரின் டெல்லி பயணம் தகவல் வெளியானதுமே, திமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
நாளை மறுநாள் அதாவது 16ம் தேதிதான், ஆளுநர் சென்னை திரும்புவார் என்கிறார்கள்.. அப்படியானால், அதற்கு பிறகே பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், எம்பி தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் இந்த திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது?
நடத்தை விதிமுறைகள்: காரணம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றும் தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததால், தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டு, அமைச்சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.. ஆனால், பதவிப்பிரமாணம் என்பது அவரது தனிப்பட்ட முடிவை பொருத்தது என்கின்றன ஆளுநர் மாளிகை வட்டார தரப்புகள்.
பொன்முடி: பொன்முடி ஏற்கனவே வகித்துவந்த உயர்கல்வி துறை, தற்சமயம் ராஜகண்ணப்பனிடம் உள்ளது... ஒருவேளை பொன்முடி அமைச்சராகும் பட்சத்தில், அவருக்கு மறுபடியும் அதே துறை வழங்கப்படலாம் என்கிறார்கள்.
ஒருவழியாக இப்போதுதான் சட்டசிக்கலிலிருந்து போராடி மீண்டு வந்திருக்கும் பொன்முடி தரப்புக்கு, ஆளுநரின் இந்த திடீர் பயணம் கடும் அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.. இதையடுத்து, பொன்முடி பதவி பிரமாண விவகாரம் தொடர்பாக, மூத்த வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் பரபரப்பு: ஏற்கனவே, மாநில அரசுடன் ஆளுநருடனான மோதல் போக்கு வலுத்து வரும்நிலையில், திடுதிப்பென வெளியாகியிருக்கும் இந்த டெல்லி பயணம், திமுகவுக்கே ஷாக் தந்துள்ளதாக தெரிகிறது.. இன்றைய தினம் திமுக தரப்பிலும் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!
ஆளுநர் ரவி: பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காகவே ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில், அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications