டிசம்பர் 12ம் இல்லை.. ஜனவரி 14ம் இல்லை.. ரஜினி கட்சி எப்பப் பொறக்கப் போகுது தெரியுமா.. செம மேட்டர்!
ரஜினி கட்சி தொடங்குவது எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது
Recommended Video
சென்னை: "அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்" என்று ரஜினி படத்தில் ஒரு பாடல் வரும்.. அது மாதிரி ரஜினிக்காக கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக காத்திருக்கிறது ஒரு மக்கள் கூட்டம்.. ஆனால் அவர்தான் வந்த பாடில்லை. ஆனால் இப்போது தேதி குறித்து விட்டார்களாம்.
முதலில் டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று போன டிசம்பர் 12ம் தேதியே எதிர்பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை. அது போனதும் பொங்கலுக்கு வரும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.

இந்த டிசம்பர் 12ம் தேதியாவது ஏதாவது நடக்க வாய்ப்பிருக்கா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பிறந்த நாளன்றும் இருக்காதாம். சரி அடுத்த பொங்கலுக்கு நிச்சயம் இருக்கலாம் என்று தகவல் கசிந்தது. இதற்கு காரணம், ரஜினியை பிரஷாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியதால். ஆனால் அதுவும் கிடையாதாம்.
இப்போதைக்கு கிட்டத்தில் உள்ள முக்கியமான தேதி என்றால் அது ஏப்ரல் 14ம் தேதிதான். அது சித்திரை மாதத்தின் முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு தினம். எனவே அந்த நாளில் ரஜினியின் கட்சி தொடங்கப்படவுள்ளதாக புதிதாக ஒரு டாக் கிளம்பியுள்ளது.
ஏன் பொங்கல் நாளில் கட்சிப் பெயரை அறிவிக்கவில்லை என்று கேள்விகள் எழுந்தாலும் கூட தமிழ்ப் புத்தாண்டு என்று வரும்போது தமிழர்களின் மனதை எளிதாக டச் செய்து விடலாமே என்று ஒரு குரூப் கூறுகிறது. இப்படித்தான் தமிழை மையமாக வைத்து தமிழர்களை டச் பண்ண பாஜகவும் முயன்று வருகிறது. ஆனால் இதுவரை முடியவில்லை.
இன்னொரு தகவலும் சொல்கிறார்கள். ரஜினியின் கட்சி தேசியத்தை மையமாக வைத்து செயல்படப் போகிறதாம். அதாவது ஆன்மீக தேசியம். இங்கு திராவிடம், கழகம் இதெல்லாம் இருக்காதாம். மாறாக தேசிய நீரோட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் அவர்களது செயல்பாடுகள் இருக்குமாம். அதாவது மிஸ்டர் பாரத் என்ற படப் பெயருக்கு பொருத்தமாக ரஜினியின் கட்சி இருக்கக் கூடும் என்கிறார்கள்.
ரஜினி கட்சியின் தொடக்கத்துக்கான அத்தனை ஏற்பாடுகளும் படு ரகசியமாக நடந்து வருகின்றனவாம். ஒரு தகவல் கூட கசிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளனராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications