அமைச்சரவை மாற்றம் எப்போது? நிருபரின் கேள்வியால் சற்று யோசித்த ஸ்டாலின்! கடைசியாக கூறிய ‛நச்’ பதில்
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாள் சுற்றுப்பயணமாக இன்று புறப்பட்டு சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரிடம் அமெரிக்கா சென்று வந்த பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனை கேட்டதுமே சிரித்த ஸ்டாலின் சில வினாடிகள் யோசித்து கடைசியாக சொன்ன பதிலை கேட்டு அங்கிருந்த அமைச்சர்கள் அனைவரும் சிரித்தனர்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் துபாய் வழியாக அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அவருடன் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

நாளை முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ நகரை சென்றடைய உள்ளார். அதன்பிறகு தொழில் முதலீட்டு மாநாடு, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். முதல்வர் ஸ்டாலின் மொத்தம் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பார். செப்டம்பர் 12ம் தேதி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து அவர் மீண்டும் சென்னை வருகை தர உள்ளார்.
முன்னதாக அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் கோட்சூட் அணிந்திருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அமெரிக்கா சுற்றுப்பயணம் பற்றியும், கடந்த 3 ஆண்டுகள் தமிழக அரசு ஈர்த்த தொழில் முதலீடுகள் பற்றியும் அவர் விளக்கினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பிறகு அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா'' என்று கேள்வி எழுப்பினார். அதனை கேட்டவுடன் சிரித்த முதல்வர் ஸ்டாலின் சில வினாடிகள் பதில் சொல்லாமல் யோசித்தார். அதன்பிறகு அவர், ‛‛மாறுதல்ஒன்று தான் மாறாதது.. Wait And See'' என்று கூறவே சுற்றி இருந்த அமைச்சர்கள் அனைவரும் சிரித்தனர்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications