Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜமாகவே "சிக்ஸர்".. கவர்னர் போட்ட பிளானையே நொறுக்கி தள்ளிய திமுக.. மண்டை காயும் அதிமுக.. என்னாச்சு?

ஆளுநர் ரவியின் திட்டத்தையே முறியடித்த திமுகவின் அதிரடி பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக, அதிமுக., திமுக கட்சிகளின் "அரசியல்" குறித்த செய்திகளும் கசிந்து வருகின்றன.

Recommended Video

    ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால் பூரித்து போன சசிகலா.. அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அதிரடி விளக்கம்

    நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 90 சதவீத இடங்களைக் கைப்பற்றியது திமுக.. புதிய வரலாறும் படைத்தது!

    அந்த வகையில உள்ளாட்சி அமைப்புகளின் உயர் பதவிகளில் திமுகவினரே இருக்கிறார்கள்... இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை அடுத்து மக்களோடு அதிகம் தொடர்புடைய மற்றொரு அமைப்பு எனில் அது கூட்டுறவு சங்கங்கள் தான்.

     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    தமிழகம் முழுவதும் எடுத்து கொண்டால், தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 4450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவைகளுக்கு கடந்த 2018-ல் தேர்தலை நடத்தியது அபோதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். இதில் 99 சதவீதம் அதிமுகவினர்தான். இவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள். அந்த வகையில் 2023-ல் தான் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

     பதவிக்காலம்

    பதவிக்காலம்

    ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என நினைத்த தற்போதைய திமுக அரசு, கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பதவியின் காலத்தை 3 ஆண்டுகளாக குறைத்து கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது சட்டமியற்றி அதனை கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது.. இதனிடையே, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் கவர்னரை சந்தித்தனர் அதிமுக தலைவர்கள்.. அப்போது, தங்களது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்திருந்தனர்...

    சட்டமசோதா

    சட்டமசோதா

    அந்த சந்திப்புகளின் போது, "தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவினரின் பதவியை பறிக்கவே அந்த சட்டமசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். இதனை நீங்கள் அனுமதிக்ககூடாது" என்று அதிமுக தலைவர்கள் கவர்னரை வலியுறுத்தியிருந்ததாகவும், அதை ஏற்றுக் கொண்ட கவர்னரும் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது..

     கேள்விகள்

    கேள்விகள்

    இதையடுத்து, திமுக அரசிடம் இதை பற்றி கவர்னர் வேறுவிதமாக எடுத்துரைத்தாராம்.. "புதிய சட்டத் திருத்த மசோதா, இனி வரும் புதிய நிர்வாகத்துக்குத் தான் பொருந்தும்... ஏற்கனவே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவின் பதவி காலம் 3 வருடங்கள் முடிந்து 4-வது வருடமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நடைமுறையில் உள்ள நிர்வாகத்துக்கு பொருந்தாது" என்று சொல்லி திமுக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினாராம் கவர்னர்.

     நிர்வாக குழு

    நிர்வாக குழு

    இதனால், திமுக அரசின் திட்டம் நொறுங்கி போய்விட்டது.. கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழுவை கலைத்து விட்டு, மறுபடியும் தேர்தல் நடத்தி அதிலும் திமுகவினரை அமர வைக்க போடப்பட்ட திட்டம், தோல்வியில் முடிந்துவிட்டதால், வேறு ஒரு பிளானை கையில் எடுத்து, கவர்னரின் திட்டத்துக்கே செக் வைத்துள்ளதாம் திமுக தரப்பு.

    பதவிகள்

    பதவிகள்

    அதாவது, அடுத்தாண்டு தான் கூட்டுறவு சங்கங்களுக்கு முறைப்படி தேர்தல் நடக்கும், அதனால், கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பதவிகளிலும் நிர்வாக குழுவிலும் கோலோச்சும் அதிமுகவினரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், கூட்டுறவு சங்கங்களின் சார்-பதிவாளர் அல்லது பொது விநியோகத்தின் திட்ட சார் - பதிவாளர் ஒருவரை நிர்வாக குழுவின் கூடுதல் இயக்குநராக நியமிக்க முடிவு செய்து அதற்கான உத்தரவை தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறையின் பதிவாளர் உத்தரவிட்டிருக்கிறார்.

    சிக்ஸர்

    சிக்ஸர்

    இந்த நியமனத்தால், அதிமுகவினர் கோலோச்சும் நிர்வாகக் குழுவில் தன்னிச்சையாக எந்த செயல்பாடுகளையும் தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது என்கிறார்கள் கூட்டுறவுத்துறை பணியாளர்கள்.. அதிமுக ஒரு பந்தை வீசினால், அதை திருப்பி வாங்கி போட்டு சிக்ஸர் அடித்துவிடுவதே திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+