இனி பிரச்சினை இருக்காது.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்! அதிகாரப்பூர்வ தகவல்
சென்னை: கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே செல்ல ஏதுவாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் பல ஆண்டுகளாகவே கோயம்பேட்டில் தான் புறநகர் பேருந்து நிலையம் இருந்தது. பல்வேறு ஊர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அங்கிருந்து தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், டிராபிக் அதிகரித்தால் கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்போது கிளாம்பாக்கத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் போதிலும், அங்கே சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் அளிக்கிறார்கள்.
விஸ்வநாத் ஈர்யா: இதையடுத்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாத் ஈர்யா சென்னை மேற்கொண்டு வரும் ரயில்வே திட்ட பணிகள் குறித்து விளக்கினார். அப்போது அவர், "அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மொத்தம் 17 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. அதில் ஏற்கனவே 8 ரயில் நிலையங்களின் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகள் நடந்து வரும் நிலையில், மற்ற 7 ரயில் நிலையங்களுக்குப் பிரதமர் மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.

ரயில் நிலையங்கள்: இத்திட்டத்தில் முதலில் 15 ரயில் நிலையங்கள் தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இதில் இப்போது திரிசூலம் மற்ற குரோம்பேட்டை ரயில் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் இருக்கும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தின் கூழ் இந்த ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
மேலும், பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில்களில் கூடுதலாக 5 ரயில்களைக் கூடுதலாக கூடுவாஞ்சேரி வரை இயக்க திட்டமிட்டுள்ளோம். பீக் ஹவர் எனப்படும் பொதுமக்கள் பணிக்குச் செல்லும் காலை மற்றும் மாலை வேலையில் இரண்டு மார்க்கத்திலும் தலா 5 ரயில்கள் என மொத்தம் 10 ரயில்களை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம். நாளை மறுநாள் அதாவது திங்கள்கிழமை முதலே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
யானைக்கவுனி மேம்பாலப் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது. இது தவிர நகரில் ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களும் மிக விரைவில் முடிக்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை அதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அங்கே அடுத்த 6 மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும். மேலும், வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க தற்போதுள்ள நிலத்தைக் காட்டிலும் அதிக நிலம் தேவைப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்குப் பிறகு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும்" என்றார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
நீ நல்லா 'சாப்பிட்டிருக்க'.. நான் இன்னும் சாப்பிடல.. கிளாம்பாக்கத்தில் அமைச்சர் பேசியது ஏன்? -
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications