Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இருங்க வரேன்".. திமுகவுடன் புது கட்சி.. "அவரை கூப்பிடுங்க".. பறந்து வந்த போன்.. கூட்டணி கன்பார்ம்?

மநீம ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படலாம் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பலம்வாய்ந்த கூட்டணியுடன், திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று 2 மாதத்துக்கு முன்பு நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. அதற்கான நேரம் கனிந்து வருவதாக நம்பப்படுகிறது. திமுக கூட்டணியும் விரைவில் முடிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு, நம் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக ஒரு செய்தி கிடைத்தது... ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று, கமல்ஹாசன் நடத்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்து கொண்டார் இல்லையா? இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிறகு ராகுலும் கமலும் தனிப்பட்ட முறையில் சந்தித்து அப்போது விவாதித்துள்ளனர்.. அந்த சந்திப்பில், "காங்கிரஸ் கூட்டணிக்குள் நீங்கள் வரவேண்டும்" என்று கமலிடம் ராகுல் கோரிக்கை வைத்திருக்கிறார்.

 எக்ஸ்க்ளூஸிவ்

எக்ஸ்க்ளூஸிவ்

அதை ஆமோதித்த கமல்,"திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்காதா?" என்று கேட்டதற்கு, "திமுக அலையன்சில் இருந்து விலகும் யோசனை நமக்கில்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழலை திமுக உருவாக்கும் என எனக்கு சந்தேகம்" என்றிருக்கிறார் ராகுல். அதற்கு கமல், "திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் பட்சத்தில் நான் எப்படி உங்கள் கூட்டணிக்கு வரமுடியும்? " என்று கேட்க, "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டுகளில் உங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கேற்ப திமுகவிடம் பேசுவோம்" என்று ராகுல் சொல்லி உள்ளார்.

 ஆஃபர் டெல்லி

ஆஃபர் டெல்லி

அதற்கு கமல், "காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் உங்களுடன் கைக்கோர்க்க தயார். மற்றதெனில் யோசிக்க வேண்டும்" என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்... இதனையடுத்து, திமுக கூட்டணியில் நடக்கும் சில ரகசியங்கள், காங்கிரசுக்கு அதிமுக வைக்கும் ஆஃபர் என பல விஷயங்களை கமலிடம் பகிர்ந்து கொண்டாராம் ராகுல். ஆக மொத்தம் திமுக கூட்டணியில் கமல் இடம்பெறக்கூடும் என்றே தெரிகிறது.. ஆனால், கமல் டெல்லி சென்று ராகுலை சந்தித்தது, திமுக தரப்பில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.

 1+1

1+1

கமலுக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் இரண்டரை சதவீத வாக்குவங்கியை தன்பக்கம் திருப்ப திமுக தரப்பு யோசித்து வரும் நிலையில், கமல் நேரடியாகவே ராகுலை சென்று சந்தித்துவிட்டார்... ஒருவேளை காங்கிரஸ் + அதிமுக + கமல் கூட்டணி அமையலாம் என்று யாரோ சிலர் கொளுத்திபோட, இதுவும் திமுக தரப்பில் லேசான கலக்கத்தை எழுப்பியதாம்.. காரணம், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க வேண்டுமானால், அதற்கு காங்கிரசின் தயவு தேவை... அதனாலேயே, பிடிஐ-க்கு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட, ராகுலின் பெருமையை பேசியிருந்தார்..

 விதவித காரணம்

விதவித காரணம்

"அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும். அந்த கூட்டணியில் காங்கிரசும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணி வெற்றிகரமான கூட்டணி என்பது நிரூபணம் ஆகி உள்ளது" என்று ஸ்டாலின் அழுத்தமாக அந்த பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். ராகுலை ஸ்டாலின் புகழ்ந்ததற்கு இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது..

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ராகுல் காந்தியை தனியாக, ஒரு மணி நேரம் கமல் சந்தித்து பேசியது, வடமாநில மீடியாக்களில் மிகப்பெரிய விவாதமாகவே அப்போது நடந்ததாம்.. அந்த பரபரப்பை திசை திருப்பும் விதமாகவும், திமுகதான் காங்கிரஸின் நம்பிக்கையான கூட்டணி என்பதை ராகுலுக்கு உணர்த்தவும்தான், முதல்வர் இப்படி ஒரு பேட்டியை தந்ததாகவும் சொன்னார்கள்.. அதாவது கமல் - ராகுலின், ஒரு மணி நேரம் சந்திப்பானது, பல்வேறு யூகங்களையும், அலசல்களையும் தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்திவிட்டு போனது.

 ப்ராமிஸ் ராகுல்

ப்ராமிஸ் ராகுல்

இப்போது இன்னொரு தகவல் கசிந்துள்ளது.. ''கமலின், மக்கள் நீதி மய்யம் சார்பில், பிப்ரவரி 3வது வாரம், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்துவருகிறார்கள்.. இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.. ''பிப்ரவரி இரண்டாவது வாரம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதை முடித்துக் கொண்டு, தமிழகம் வர உள்ளதாக ராகுலும் உறுதி தந்திருக்கிறாராம்.. ஆனால், அதேசமயம், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு கூப்பிடுங்கள் என்று ராகுல் சொன்னாராம்..

 சிக்னலோ சிக்னல்

சிக்னலோ சிக்னல்

அந்தவகையில், மய்யம் சார்பாக ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வரும் அழைக்கப்படுவார் என்கிறார்கள். ஏற்கனவே டெல்லி சென்று, காங்கிரசுடன் கூட்டணி என்று கமல் சிக்னல் தந்துவிட்டு வந்த நிலையில், இந்த ஜல்லிக்கட்டு விழாவில், ஸ்டாலினும் பங்கேற்றால், திமுக - காங்கிரஸ் - மநீம கூட்டணி ஓரளவு முடிவாகும் என்று நம்பப்படுகிறது.. ஆக, ஒரே மேடையில ராகுல் - ஸ்டாலின் - கமல் என 3 பேரும் ஒன்றாக தோன்றி, கூட்டணியை கன்பார்ம் செய்கிறார்கள் போல.. சபாஷ்!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+