கல்லூரிகளையடுத்து.. தமிழகத்தில் இந்த மாதமே திறக்கப்படுகிறதா பள்ளிகள்? செங்கோட்டையன் பதில்
சென்னை: இந்த மாதத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட பதில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ம் தேதியன்று 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா்.

கருத்து கேட்பு
இந்த அறிவிப்புக்கு பொது மக்கள், பெற்றோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து தெரிவித்தனா். இதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. பல பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து கூறினர்.
எனவே இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

விரைவில் பள்ளி திறப்பு
இது ஒரு பக்கம் என்றால், கடந்த வாரம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறையத் தொடங்கியதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, பள்ளிகளும் விரைவிலேயே திறக்கப்படலாம் என்கிற கருத்து நிலவி வருகிறது.

செங்கோட்டையன் பேட்டி
இந்த நிலையில்தான், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த நேற்றைய பேட்டியில், இந்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியாளர்கள் கருத்து
செங்கோட்டையன் கூறியதை பாருங்கள்: எதிர்க்கட்சிகள் எவ்வளவு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை உங்களால் காண முடிகிறது. எனவே, கவனமாக, பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை அறிந்துதான் முடிவெடுக்க முடியும். முதலமைச்சர் அவர்கள் தான் இந்த முடிவுகளை மேற்கொள்வார். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications