உ.பிக்கு மட்டும் 7 மெட்ரோ சேவை.. சென்னை மெட்ரோவிற்கு "0" நிதி.. மத்திய அரசின் செயல்.. கவனிச்சீங்களா
சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. அதே சமயம் கோவை, திருச்சி, மதுரை மெட்ரோவிற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கா வாய்ப்பு குறைவு என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், உத்தர பிரதேசத்தில் 7 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வருட இறுதிக்குள் மத்திய அரசின் நிதி உதவியுடன் 7 மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

நொய்டா
கிரேட்டர் நொய்டா
லக்னோ
கான்பூர்
ஆக்ரா
காசியாபாத் (DMRC)
மீரட் ஆகிய மெட்ரோ சேவைகள், மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சென்னை மெட்ரோ கட்டுமானத்திற்கு மத்திய அரசுதான் காசு கொடுக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு விமர்சனங்களை சந்தித்துள்ளது.
சென்னை மெட்ரோ 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு ஆபரேஷன் ஆகிறது. அதை தவிர 118.9 கிலோ மீட்டருக்கு மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானம் முடிந்தால் சென்னையில் 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னையில் மெட்ரோ செயல்படும். இந்த கட்டுமானத்திற்கு மத்திய அரசுதான் காசு கொடுக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் .
என்னதான் புதிய மெட்ரோ பற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தாலும்..சென்னையில் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் மெட்ரோவிற்கு மத்திய அரசு இதுவரை பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
உண்மை என்ன ?: உதாரணமாக சென்னையில் முதலில் கட்டப்பட்ட 54.1 கிலோ மீட்டர் மெட்ரோவிற்கு மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கியது. இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்பதே உண்மை.
இரண்டாம் கட்ட மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிதி: இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது.
மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில் கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்ளை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோவிற்கு பணம் இல்லை: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திமுக ராஜ்யசபா எம்பி வில்சனின் கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோவின் 118.9 கிமீ கட்டம்-II கட்டுமானப் பணிகள் ஏற்கனவே மாநில நிதி மற்றும் JICA இன் வெளி நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திட்டத்தின் முதல் ரயில் டிசம்பர் 2025 இல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications