2021-ல் சட்டமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கை எப்போது நடைபெற்றது தெரியுமா? இதோ விவரம்!
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற்றது? வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தேதி ஆகிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்க உள்ளது. ஜனநாயாக திருவிழா என்று அழைக்கப்படும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற்றது? வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தேதி ஆகிய விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி 2021, பிப்ரவரி 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்கம், அசாமில் பல கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 06 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2021 மே 02 அன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் 2021-ல் நடைபெற்றது. மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 06, 10, 17, 22, 26, 29 என எட்டு கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 5 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 15 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்.
சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை:
தமிழ்நாடு: 234
கேரளா: 140
மேற்கு வங்கம்: 294
அசாம்: 126
புதுவை: 30.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications