சல்லி சல்லியாகுதே.. நாள் குறித்த ஸ்டாலின்! தூக்கப்படும் 2 பேர்! உள்ளே வரும் புதுமுகம்! அரசியலே மாறுதே
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதனால் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்.
வெளிநாடு செல்வது, 2026 சட்டசபை தேர்தல், ஆட்சி அதிகாரத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம்.
முன்பு போடப்பட்ட பயண திட்டம் அப்படியே மாற்றப்பட்டு உள்ளதாம். மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த ஆகஸ்ட் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
பயண திட்டத்தில் மாற்றம்: அதே சமயம் உடல் நலன் குறித்த மருத்துவ பரிசோதனைக்காகவும் ஸ்டாலின் செல்கிறார் என்றும் தகவல் பரவியிருந்தன. ஆனால், அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஜூலை மாதம் செல்ல வேண்டியவர்.. ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம்: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்
சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து துறை, மின்சார துறை , அமலாக்கத்துறை ஆகியவை மாற்றம், உள்ளாட்சி துறை மாற்றம், விளையாட்டு துறை மாற்றம்.. ஆகிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது .
உதயநிதி ஸ்டாலின்: புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர்.
ஆனால் ஆட்சி மீது சில விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றப்படும். 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. அவர்கள் மாற்றப்படலாம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது.
உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றம் + உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி உட்பட அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஸ்டாலின் வெளிநாடு செல்வதை முன்னிட்டு ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள்.
அதை மனதில் வைத்தே சமீபத்தில் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications