மிக விரைவில் அமைச்சரவை மாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி! அப்போ உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?
சென்னை: அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஒரே வரியில் நறுக்கெனப் பதிலளித்தார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதை இலக்காக வைத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காகத் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
முதல்வர் ஸ்டாலின்: அப்போது பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் பிஸ்னஸை தொடங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தச் சூழலில் முதல்வர் ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
அவருக்கு விமான நிலையத்திற்கு நேரில் சென்று அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது அமெரிக்கப் பயணம் குறித்து விளக்கினார். எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக முதலீடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அனைத்தும் உறுதியாக வரும் முதலீடுகள் என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம்: அப்போது தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "நாங்கள் திமுக.. சொன்னதை தான் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். இந்த கேள்விக்கான பதிலை நான் ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். திமுகவின் 75வது ஆண்டு விழா பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து மாற்றங்களும் ஏற்படும் சூழல் உருவாகும் என நம்புகிறேன்" என்று மட்டும் பதிலளித்துவிட்டுச் சென்றார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் முதல்வர் ஸ்டாலினும் அதை உறுதி செய்துள்ளார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications