"மணிவண்ணன்" அப்பா செருப்பு என்கிட்ட இருக்கு.. யார் தாழ்த்தப்பட்டவர்.. "குடைக்குள்" சீமான்.. செம அனல்
மதுரை பழங்காநத்தம் பகதியில் சீமான் பேசிய பேச்சு இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
சென்னை: குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி என்றும், சாதிவாரி கணக்கெடுப்பும், மொழி்வாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும், குடிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது.. கொட்டும் மழையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பும், மொழி்வாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும், குடிவாரி கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்றும் இந்த கூட்டத்தில் சீமான் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

குடைக்குள் சீமான்
"வந்தவரை எல்லாம் வாழ வைத்தவர்கள் தமிழர்கள் என்ற வார்த்தையில்தான் தமிழர்கள் விழுந்துவிட்டனர். அதில் இருந்து இன்னும் எழாமல் இருப்பதால் தான், எல்லா மாநிலத்தினரும் தமிழகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டார்கள்.. வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு படை எடுத்து வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மற்றவர்களை போல் சாமியை காக்க அரசியல் செய்யவில்லை, இந்த மண்ணையும், பூமியையும் காக்க நாங்கள் அரசியல் செய்கிறோம்..

குடையில் சீமான்
ஆமா, நீ ஏன் என்னை பார்த்து பயப்படறே.. என்னை இனவெறி என்று பேசுறியே, நீ என்ன வெறி? என்னை எப்படி நீ இனவெறி என சொல்லலாம்? இந்த மண்ணின் மகன் நான்.. இந்த மண்ணின் மக்களுக்காக பேசுவதை, நீ எப்படி பாசிசம் என்பாய்? நான் பேசுவது உனக்கு இனவெறியாக பட்டால், இதைவிட எனக்கு பெருமைக்குரியது எதுவுமே இல்லை.. உண்மையிலேயே நாம் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

பெரிய பொய்
பெரியார் சொல்கிறார், "ஒரு வகுப்பினன், தன் வகுப்புக்குரிய இட வாய்ப்பை, வேலைவாய்ப்பை பெறவில்லையானால், அவன் மானமிழந்தவன் ஆவான்" என்கிறார்.. இப்ப நான் மானம் இழந்தவனாக இருக்கவா? மானம் உள்ளனவாக போராடவா? நாடு முன்பைவிட முன்னேறி போய்க்கொண்டே இருக்கிறது என்று மோடி சொல்றாரு.. ஆனால் அதைவிட பெரிய பொய், இவங்க "சமூக நீதி, சமூக நீதி" என்று இங்கே பேசிக் கொண்டிருப்பது.. முதலில் சாதி வாரியாக கணக்கெடுங்கள்.. படையாச்சி எவ்வளவு? வன்னியர்கள் எவ்வளவு? என்றெல்லாம் எண்ணுங்க..

100+ லட்டுகள்
அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுங்கள்.. 100 லட்டுதான் இருக்கா? போதவில்லையானால், இன்னும் 10 லட்டு உருட்டுங்கள்.. என்ன கெட்டுப்போச்சு இப்போ? உருட்ட தெரியலயா? மாவு இப்படி கொடு, நாங்க உருட்டறோம்.. உனக்கு என்றால் மட்டும், உருட்டி உருட்டி சாப்பிட்டிப்பியா? நாங்க ஒதுக்கீடு கேட்டால் விரட்டி விரட்டி அடிப்பியா? எங்களுக்கு பங்கீடு கொடு, அவங்களுக்கு ஒதுக்கீடு கொடு.. மகாராஷ்ராவில் 25 லட்சம் என்றார்கள்.. அதில் எங்களுக்கென்ன லாபம் இருக்கு? கர்நாடகாவில் ஒன்னேகால் கோடி என்றார்கள்.. எங்களுக்கு என்ன இருக்கு?

மணிவண்ணன்
தேவேந்திரர் எவ்வளவுன்னு எண்ணுங்க.. முதல்ல அவங்களை பட்டியல் பிரிவில் இருந்து எடுங்க.. எடு முதல்ல.. இனிமேல் யாரையாவது தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னால், என் மணிவண்ணன் அப்பா, செருப்பு வெச்சிட்டு போயிருக்கார்.. என்கிட்ட தான் அந்த செருப்பு பாதுகாப்பாய் இன்னமும் இருக்கு.. ஜாக்கிரதை.. தமிழன் என்றுமே பெருமைக்குரியன்.. "அடுத்தவன் வந்து உன்னை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு எழுந்து சொல்லடா, நான் ஆகச்சிறந்தவன் என்று" என ஜூலியஸ் ஸீஸர் சொல்றாரே.. அதுமாதிரி நாங்கள் ஆகச்சிறந்த இனத்தின் மகனடா..!!

சுடிதார் கவிஞர்
உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்த இனத்தின் மக்கள் நாங்கள்.. எனக்கெல்லாம் யாரும் பாடம் நடத்தாதீங்க.. நானே உலக பெரிய பாடம், புரியுதா? தம்பி அண்ணாமலை சொன்னாராமே, சீமான் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்கிறார், அவர் என்ன பெரிய ஞானியா? என்று கேட்டாராம்.. தம்பி அண்ணாமலை, அறிவது அறிவது, உணர்வது ஞானம்.. நான் உணர்கிறேன்.. என்கிட்ட கேள்விகள் கேட்டால், பதில் இருக்கு சொல்றேன், உன்கிட்ட பதில் இல்லை, பேசாமல் நிற்கிறாய்.. அண்ணாமலை நம்மள கிண்டலடிக்கிறாராம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications