மோடி சர்ச்சுக்கு போய்ட்டாரு! ஸ்டாலின் எப்போ கோயிலுக்கு செல்வார்? தமிழிசை அதிரடி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தேவாலயத்திற்கு சென்றுவிட்டார், முதல்வர் ஸ்டாலின் எப்போது இந்து கோயிலுக்கு செல்வார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி கதீடரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எப்போது இந்து கோயிலுக்கு செல்வார் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamilisai Soundararajan

சனாதன தர்மம்

இதுகுறித்து தமிழிசை செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், "'சனாதன தர்மத்தை நான் ஒழிப்பேன், நான் ஒரு கிறிஸ்தவன், இந்து மதம் வேற்றுமையை விதைக்கிறது' என உதயநிதி தொடர்ந்து பேசி வருகிறார்," என்று தமிழிசை கூறினார். ஒரு துணை முதலமைச்சருக்குரிய பொறுப்புடன் உதயநிதி எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர் தங்கள் மீது வீண் பழி சுமத்துவதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.

தேவாலயத்தில் மோடி

பிரதமர் மோடி தேவாலயத்திற்குச் சென்றதைக் குறிப்பிட்ட தமிழிசை, முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்போது இந்து பண்டிகைகளின்போது கோவிலுக்குச் செல்வார் என்று சவால் விடுத்தார். "தமிழக கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களை 'சங்கிகள்' என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று பிரதமர் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டார். இதேபோல், முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளின் போது கோவில்களுக்குச் செல்வாரா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக மதச்சார்புள்ள கட்சி

மேலும், "உண்மையான மதச்சார்பற்ற கட்சி பாஜகதான்; திமுகவோ மதச்சார்புள்ள கட்சியாக செயல்படுகிறது" என்று தமிழிசை உறுதியாகக் கூறினார். மதச்சார்பின்மை பற்றிய திமுகவின் நிலைப்பாடு கேள்விக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியே நின்றால் விஜய் வெல்ல முடியாது

தொடர்ந்து நடிகர் விஜய் பற்றி பேசிய தமிழிசை, அரசியலில் தனித்து நின்று வெற்றி கொள்ள முடியாது என்றார். மேலும் தமிழிசை, தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், எல்லோரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். அதிமுக, பாஜக கூட்டணி இப்போதே பலமாக இருக்கிறது, மற்றவர்கள் இணைந்தால் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

125 நாள் வேலைவாய்ப்பு

மேலும் அவர் கூறுகையில், 125 நாட்கள் வேலை வாய்ப்பை எதிர்ப்பதற்கு திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. ஒரு பக்கம் விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள், ஒரு பக்கம் செவிலியர்கள், ஒரு பக்கம் அரசு ஊழியர்கள்... எல்லோரையும் போராட வைத்துவிட்டு 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு எடுத்துவிட்டு என ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டணி

அந்தந்த கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது அவர்கள் உரிமை. ஆனால் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்தியவராக இருக்கிறோம். எனவே தனியே நின்று தம்பி விஜய் வீணாகிடக் கூடாது என கோரிக்கை வைப்பதாக தமிழிசை தெரிவித்திருந்தார்.

தொகுதி பங்கீடு

தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுகவிடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+