உள்ளே வரும் கமல்.. மக்கள் நீதி மய்யத்துடன் சீட் ஷேரிங் பேச்சு எப்போது? ஐ.பெரியசாமி சொன்ன வார்த்தை!
சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, ஆகியோர் உள்ளனர். இவர்கள் தான் கூட்டணி கட்சிக்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன், சிபிஐஎம் மற்றும் அதனைத் தொடர்ந்து மதிமுக குழுவினர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் பிப்ரவரி 12ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். விசிக உடன் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
ஓவர் ஓவர்.. ஸ்டாலின் வரட்டும்.. விசிக உடனான திமுக பேச்சுவார்த்தை தள்ளிப் போனதன் பின்னணி இதுதானா?
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து திமுக தலைவர் முடிவு செய்வார் என்றும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம், மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாக கடந்த பல மாதங்களாக தகவல்கள் வட்டமடிக்கின்றன. மேலும், திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் பெற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications